தேவன் மோசேயிடம் பேசினார் GOD TALKED TO MOSES சிகாகோ சுவிசேஷ கூடாரம், சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா. 53-08-31 1. உமக்கு நன்றி சகோதரனே...?... மாலை வணக்கம், நண்பர்களே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஊழியம் செய்யும்படியாக இன்றிரவு இங்கே மீண்டும் இருப்பது மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. அது போல சகோதரன் லீஸ் அவர்களின் இந்த அற்புதமான பாடல்களையும் பாராட்டுகிறேன். மேலும் நான் கேள்விப்பட்டேன்... சகோதரன் பாக்ஸ்டர் என்னை அழைத்து, அவர் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். அதில் சிலவற்றைக் கேட்கும்படியாக, என்னால் எவ்வளவு துரிதமாக வர முடியுமோ அவ்வளவு துரிதமாக விரைந்து வந்து விட்டேன். அதைப் போன்று பாடுவது என்பது... நீங்கள் மேலே பரலோகத்திற்குப் போகும் போது, அங்கு அவ்விதமாக பாடிக் கொண்டிருக்கும் இடத்தை அடையும் போது, என்னைக் காண விரும்புகிறேன். நான் அதைச் சுற்றி தான் எங்காவது இருப்பேன். நான்.... ஏனென்றால் நான் நிச்சயமாகவே அதை நேசிக்கிறேன். மேலும் நான் எப்போதுமே ஜனங்களிடம் கூறியிருக்கிறேன், அங்கே..... பிறகு, அங்கே சிங்காசனத்தின் கீழிருந்து தண்ணீர்கள் வெளியே வந்து, இங்கே கீழே பாய்ந்து, நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஜீவ விருட்சத்தினூடாக கடந்து போகிறது. அது வளைந்தும், இவ்விதமாக ஒரு பெரிய மலையைச் சுற்றியும் செல்கிறது. மேலும் தூதர்களின் பாடற்குழு நாள்முழுவதும் பாடிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் அங்கே இராக்காலம் கிடையாது.... 2. இந்த மறுபக்கத்தில், அதோ ஒரு சிறிய புதர் இருக்கிறது. அங்கே தான் அந்த புதரின் கீழ் தான் நான் உட்கார்ந்து, மறுகரையில் பாடிக்கொண்டிருக்கும் அவைகளைக் கவனித்துக் கேட்க விரும்புகிறேன். பாடுவது உண்மையாகவே எனக்குப் பிடிக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இசையைக் குறித்தும், கூட்டத்தில் தேவனுடைய ஆவியைக் கொண்டு வரும் பாடுதலைக் குறித்தும் ஏதோவொன்று உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கி றீர்களா? அது சரியே. இல்லினாயிஸில் உள்ள ஜெனீவாவில், எப்பொழுதும் தேசத்தை வீசியடித்துச் சென்றதிலேயே மிகப் பெரிய பயங்கரமான போலியோ கொள்ளை நோய்களில் ஒன்று அங்கே இருப்பதாக, எனக்கு இங்கே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அங்கே பத்தொன்பது நோயாளிகள் மற்றும் அவர்களில் அநேகம் பேர் ஏற்கனவே மரித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன், அது மிகவும் பரிதாபகரமாக உள்ளது, அந்த பயங்கரமான சத்துரு. எனவே, தேவன் தம்முடைய பலமுள்ள அன்பின் வல்லமையோடு இறங்கி வந்து, அந்தக் கொள்ளை நோயை அங்கே தேசத்தை விட்டு எடுத்துப்போம்படியாக, அதற்காக ஜெபிக்கும்படியான ஒரு ஜெபத்தைச் செய்யும்படி என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது, எனவே இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, அதற்காக ஜெபிப்போம். 3. எங்கள் அன்புள்ள விலையேறப்பெற்ற கர்த்தாவே, நாங்கள் உம்மிடத்தில் வர மிகவும் தகுதியற்றவர்களாக இருக்கிறோம், ஆயினும் நாங்கள் எதையாகிலும் விண்ணப்பம் பண்ணுவோம் ஆனால், நீர் அதைச் செய்வீர் என்று எங்களுக்கு வாக்குப் பண்ணும்படியாக, நீர் எங்கள் மேல் மிகவும் அன்புள்ளவராய் இருந்து வருகிறீர். அந்த நம்பிக்கையில் தான், நாங்கள் இன்றிரவு உள்ளே வந்து, எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும், இந்த தேசத்தின் பாவங்களையும், நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பட்டணத்தின் பாவங்களையும் அறிக்கை பண்ணிக் கொண்டிருக்கிறோம், தேவனே, நீர் இரங்கி, அந்தப் பயங்கரமான போலியோ பிசாசினால் விழுந்து கொண்டிருக்கிற அந்தப் பரிதாபமான சிறு பிள்ளைகளை நினைத்தருளும். இப்பொழுதும், உம்மால் இந்தக் காரியத்தை அகற்றிப் போட முடியும் என்று அறிந்திருக்கிறோம். மேலும், தேவனே, அங்கே ஒரு பழைமை நாகரீகமான கூட்டம் தொடங்கப்பட வேண்டுமென்றும், அந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் ஒரு ஜெபக் கூட்டம் துவங்கப்பட வேண்டுமென்றும் நான் ஜெபிக்கிறேன். சபைகளும், ஜனங்களும் முகங்குப்புற விழுந்து தேவனை நோக்கி உரத்த சத்தமிட்டு கூக்குரலிட்டுக் கதறுவார்களாக. அந்தக் கொள்ளை நோயை நீர் நிறுத்தி விடுவீர் என்று நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே. 4. அந்த ஜனங்களுக்காகவும், அந்தப் பட்டணத்திலுள்ள அந்தக் கிறிஸ்தவர்களுக்காகவும், மற்றும் அந்தப் பரிதாபமான சிறு பிள்ளைகளுக்காகவும் எங்கள் இருதயங்களிலிருந்து இரத்தம் கசிகிறது என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம். ஓ தேவனே, சாபங்கள் யாவும் விலகிப்போய், அதற்கு மேலும் வியாதியோ, மனத்துயரமோ இல்லாமல் இருக்கும் அந்த நாள் சீக்கிரமாக வரட்டும். நாங்கள் இன்றிரவு அந்தப் பரிதாபமான தகப்பன்மார்களுக் காகவும் தாய்மார்களுக்காகவும் வருந்துகிறோம். அதைக் குறித்த அனுபவத்தை நான் அறிந்தவனாக அவர்களுக்காக நான் வருந்துகிறேன். அந்தப் பரிதாபமான இருதயங்கள் நொறுக்கப் பட்டிருப்பதை நான் - நான் உணருகிறேன், கர்த்தாவே. தேவனே, இரக்கமாயிரும். அந்தக் கொள்ளை நோய் இந்த இதே இரவிலேயே விலகிப் போகும்படியாக, நான் ஜெபிக்கிறேன். இன்னும் கூடுதலாக ஒரு நோயாளியும் பாதிக்கப்படாமல் (broke out) இருப்பார்களாக. அது இப்பொழுதே நிறுத்தப்படுவதாக. சத்துரு தாமே பின்வாங்கிப் போய், அழிவுக்குள்ளாக வீசி எறியப்பட்டுப் போவானாக. தேவனுடைய தூதனானவர் தாமே அந்தப் பட்டணத்திற்கு ஆதரவாக நிற்பாராக. அவர் நிற்பதை அவைகள் காணும்போது, அந்தப் பிசாசுகள் சிதறி ஓடும் என்பதை நாங்கள் அறிவோம். இதை அருளும், பிதாவே, நீர் இதைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், நாங்கள் கெஞ்சி மன்றாடுகிறோம், நாங்கள் பாவிகள் என்றும், இதற்கு தகுதியற்றவர்கள் என்றும் அறிக்கை பண்ணுகிறோம். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் நிமித்தமாக, நீர் இதைச் செய்ய வேண்டுமென்று நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம், நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். பரிதாபமான சிறு பிள்ளைகள் அவ்விதமாக அவதிப்பட வேண்டியிருப்பது மிகவும் மோசமாக இருக்கிறது. அந்தக் கடைசி சத்துரு அவருக்கு கீழ்ப்படுத்தப்படும் போது, அது ஒரு அற்புதமான நாளாக இருக்காதா? அப்போது நாம் வெற்றி வாகை சூடினவர்களாக, அவருடைய சாயலுக்குள்ளாக்கப்பட்டு, அழகானவர்களாக நின்று கொண்டிருப்போம், முப்பர்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக முகங்குப்புற, அவருக்கு முன்பாக தங்கள் முகங்குப்புற விழுந்தார்கள் என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை . சகோதரன் ரியான் அவர்களே, அது அற்புதமாக இருக்கும், அது அவ்வாறு இருக்காதா? 5. எப்படியாவது இதெல்லாம் முடியும் போது, நான் சந்தோஷப்படுவேன். உங்களுக்குத் தெரியும், உலகமானது எல்லா நேரமும் கொடுமையுள்ளதாகவும் மேலும் மோசமாகவும் ஆகிக்கொண்டு வருவதை நீங்கள் காணும்போது, பத்மு தீவில் இருந்த யோவான், "கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று கூறினதை எண்ணிப் பார்க்கிறேன். இதைக் குறித்து ஒரு விதத்தில் களைப்புற்றவர்களாகவும் சலிப்படைந்தவர்களாகவும் இருக்கிறேன், நீங்களும் அவ்வாறு இல்லையா? பிரிவதைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கிறேன். நான் ஒரு கூட்ட ஜனங்களுக்குள் வருகிறேன். அப்போது சில நண்பர்களைப் பார்த்து, அவர்களுடைய கரங்களைக் குலுக்கத்தொடங்குகிறேன், பிறகு பிரியாவிடை பெற்று, தேசத்தைக் கடந்து வேறு ஏதோவொரு இடத்திற்கும், அதன் பிறகு இங்கும் பிறகு அங்குமாகப் போய் விடுகிறேன்.... வீதிகளில் நோக்கிப் பார்க்கும் போது, இதோ பாவத்தைக் காண்கிறோம். மேலும் அது - அது அப்படியே ஒரு விதத்தில் உங்கள் இருதயத்தை இரத்தம் கசிய வைத்து விடுகிறது, நீங்கள் - ஒருகாலத்தில் அனுபவங்களை உடையவர்களாக இருந்த ஜனங்களில் அநேகர் பழைய நிலைக்கு விழுந்து போகத் தொடங்குவதை நீங்கள் காணத் தொடங்குகிறீர்கள். அப்போது நீங்கள், "கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று கதறத் தொடங்குகிறீர்கள். நாம் எல்லாருமே காலங்களினூடாக அதனோடு தான் காண வேண்டியிருந்திருக்கும் என்று நினைக்கிறேன், காலங்களினூடாக எல்லாமே, அப்படிப்பட்ட வித்தியாசமான காரியங்களையே காண வேண்டி இருந்தது என்று ஊகிக்கிறேன். இன்றிரவில், அது.... இது மிகவும் உஷ்ணமான இரவு என்று நம்புகிறேன் நாம் - அல்லது இந்த உஷ்ணமான பருவகாலத்தில், சிகாகோவில் இது வரை நமக்கு இருந்ததிலேயே மிகவும் உஷ்ணமான நாள் என்று அவர்கள் கூறுகிறார்கள். 6. எனக்கும் கூட உஷ்ணமாக இருக்கிறது, இங்கே இந்தக் கட்டிடத்தில் உட்காரும்படி உங்களிடம் கேட்டுக் கொண்டதற் காக, நான் -நான் மிகவும் வருந்துகிறேன், இது மிக பயங்கர உஷ்ணமாயிருக்கிறது. நான் - நான் அதைக் குறித்து மோசமாக உணருகிறேன், ஆனால் நான் - நாம் சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தி விடமாட்டோம், அது உங்களுக்குத் தெரியும். தேவனே அதைச் செய்கிறார். மேலும் மறுபடியுமாக, இயேசு கிறிஸ்துவின் எளிய சுவிசேஷத்தைக் கேட்கும்படிக்கு, நீங்கள் இவ்விதமான ஒரு இடத்திற்குள் உட்கார்ந்திருக்கும் ஒரு நிலைக்கு உங்கள் அன்பானது செலுத்தப்பட்டிருப்பதற்காக, நான் உங்களுக்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அந்நாளில் இழக்கப் பட்டவர்களாகிப் போகும் ஒரு நபரும் இன்றிரவு இங்கே இருக்க வேண்டாம் என்ற என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும், தேவனே, என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அங்கே இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஏதோ ஒரு வகையில், நான் அந்தப் பழைமை நாகரீக மாதிரியான பிரசங்கிமார்களில் ஒருவனாகத்தான் இருக்கிறேன், அநேகமாக எனக்கு அதிகமாக தெரியாது. எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு அதிகம் தெரியாது என்பதை நான் அறிவேன். ஆனால் நான் நம்புகிறேன், ஏதோ ஒரு வகையில் வேறொருவரை, நாம் ஒருவிதத்தில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்வோம், மேலும் எவ்வாறேனும் இதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்து கொள்வோம். 7. பாதாளத்திலும் கூட நினைவுகள் இருந்தது என்று இயேசு கூறியிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் அந்த ஐசுவரியவானைப் பார்த்து, "மகனே, நீ பூமியிலே உயிரோடிருந்த காலத்தை நினைத்துக்கொள்” என்று கூறினார். லாசருவையும் மற்றவர்களையும் குறித்து கூறியிருக்கிறார். எனவே அங்கே பாதாளத்தில் நினைவுகள் இருக்குமானால், நிச்சயமாக பரலோகத்திலும் நினைவுகள் இருக்கும். எனவே, தேவன் நம்மை நினைவுகூர வைப்பார் என்று நான் -நான் விசுவாசிக்கிறேன். ஃபன்னி கிராஸ்பி, அவள்... சில குற்றம் கண்டுபிடிப்பவர்கள் உள்ளே வந்து - எவ்வாறு என்று அவளிடம் கூறி, அவள் கிறிஸ்தவ பாடல்களையும் மற்றவைகளையும் பாடுவதை குறை கூறிக் கொண்டிருந்தார்கள்... உங்களில் அநேகருக்கு ஃபன்னி கிராஸ்பியைத் தெரியும், அவளைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள், இன்னுஞ் சரியாகச் சொன்னால், அவள் குருடான கவிஞர் பெண்ணாக இருந்தாள். அவள் உலகத்திற்கு அதனுடைய மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறாள். நான் எப்பொழுதும் பீட அழைப்புகளில் பாடி வருகிற மிகவும் இருதயத்தைத் தொடுகிற பாடலாகிய, "கனிவான இரட்சகரே, என்னைக் கடந்து சென்று விடாதேயும்' என்ற பாடல் அநேகமாக ஃபன்னி கிராஸ்பினுடையது தான், மற்றும் இருதயத்தை எளிதாக கிளர்ச்சியூட்டுகிற அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் (பாடியிருக்கிறாள்). ஏதோவொரு சமயத்தில்..... ஒரு சமயம் அங்கே யாரோ ஒருவர் கடந்து சென்று, "நீ மறுகரையில் இருந்திருப்பாயானால், நீ... அங்கே அப்படிப்பட்ட ஒரு இடமாக இருந்து... நீ அங்கேயும் குருடாக இருந்திருப்பாயானால், நீ எப்பொழுதாவது அவரை எப்படித்தான் அறிந்து கொண்டிருப்பாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், "நான் எப்படியும் அவரை அறிந்திருப்பேன்” என்று கூறினாள். "நீ அவரை எப்படி அறிந்திருப்பாய் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டார். "நான் அவருடைய கரங்களை தடவிப்பார்த்திருப்பேன்” என்றாள். பாருங்கள். அப்போது அவள் திரும்பி, தன்னுடைய நாற்காலிக்கு திரும்பி நடக்கத் துவங்கினபோது, அந்தப் பாடல் வந்தது : நான் அவரை அறிந்து கொள்வேன், ஆம், நான் அவரை அறிந்துகொள்வேன், நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள்.) மீட்கப்பட்டு அவர் பக்கத்தில் நான் நிற்பேன்; நான் அவரை அறிந்து கொள்வேன், ஆம், நான் அவரை அறிந்துகொள்வேன் ஆணிகடாவப்பட்ட அவருடைய கைகளில் உள்ள காயத் தழும்புகளினால். 8. நாம் அவரை அறிந்துகொள்வோம் என்று நான் விசுவாசிக்கிறேன். "நாம் இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவருடையதைப் போன்ற ஒரு சரீரத்தை நாம் உடையவர்களாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம். அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம்." நல்லது, அது - அதுவே எனக்குப் போதுமானது, அப்படியே அவர் இருக்கிற இடத்தில் இருப்பது. அது - அது சரி. இவை எல்லாம் முடிந்து நீங்கள் அவரை சந்திக்க வேண்டி இருந்திருக்குமானால், நீங்கள் என்ன செய்ய விரும்பியிருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை எப்பொழுதாவது உடையவர்களாய் இருந்திருக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்ய விரும்பியிருப்பீர்கள் என்று எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்தது உண்டா. என்னுடைய கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றி (Get down), அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி ஊர்ந்து (தவழ்ந்து) ஏறிச் சென்று இவ்விதமாக அவருடைய காலை அன்புடன் தட்டிக் கொடுத்திருப்பேன். அது..... இருந்திருக்கும். நான்.... அப்போது அவர் என்னை மறுத்துவிட்டு (நிராகரித்து), என்னை அகற்றி, நான் நரகத்திற்குப் போயிருந்தாலும், (நான் பட்ட பெரும் பிரயாசத்திற்கு அதைப் பெற்றுவிட்டதைப் போன்றே உணருவேன். அது சரியே. நூறு வருடங்கள் நான் வாழ்ந்திருந்தாலும், அந்த எல்லா பிரயாசங்களுக்கும், ஒரே ஒரு முறை அவருடைய காலை அன்பாக தட்டிக் கொடுக்க மாத்திரம் என்னால் முடிந்திருக்குமானால்... அவர் எவ்வளவு - எவ்வளவு அற்புதமானவர் என்றும் அவர் எனக்கு என்னவாக இருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கும் போது. நான்-நான் இன்றிரவு அவரை என்னுடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அவர் என்னை ஏற்க மறுத்து நிராகரித்திருப்பார் என்றாலும், அவர் இன்னும் நீதிபரராகவே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் நரகத்திற்கு போக வேண்டி இருந்து, அன்பு என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் அங்கே இருந்திருக்குமானால், நான் அப்பொழுதும் அவரை நேசித்து இருப்பேன். அவர் எனக்கு என்னவாக இருப்பார் என்று நான் அறிந்திருப்பது அல்லாமல், அவர் இப்பொழுதும் கூட எனக்கு என்னவாக இருந்து வருகிறார் என்பதற்காக நான் அவரை அப்பொழுதும் நேசித்திருப்பேன்.... 9. நான் அவருடைய சுவிசேஷத்தை விசுவாசித்தால் இன்றிரவு, நூறு பேர் உயிரோடெழுந்தாலோ, அல்லது மரித்த ஆயிரம் பேர்... பில்லி சண்டே இக்கூடாரத்திலும், அவரால் மனமாற்றமடைந்த வர்களிடமும் பிரசங்கம் பண்ணியிருந்து, அவர் நித்தியத்தில் இருந்து திரும்பி வந்து, "சகோதரன் பிரன்ஹாமே, நீர் இப்பொழுது, மரித்துக் கொண்டிருக்கிறீர். அந்த இயேசு கிறிஸ்துவை நீர் நம்ப வேண்டாம், ஏனென்றால் அது அவ்வாறு கிடையாது” என்று கூறும் போது. நான் மரித்துக் கொண்டிருந்தால், நான் அப்பொழுதும் இயேசு கிறிஸ்துவையே நம்பியிருப்பேன். நான் இன்றிரவு ஆயிரம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து, அவர்கள் எல்லாருமே வியாதியாயிருந்து, நான் ஆயிரம் பேர்களுக்காக ஜெபித்தும், எல்லாருமே - காலையில் அந்த ஆயிரம் பேர்களும் முழுவதுமாக மரித்துப் போனாலும், நான் நாளை இரவில், இன்னுமாக நின்று, நான் இப்பொழுது ஜெபிக்கிற வண்ணமாகவே, வியாதியஸ்தருக்காக ஜெபித்து, தெய்வீக சுகமளித்தலை விசுவாசித்துக் கொண்டிருந்திருப்பேன், ஏன் என்றால் தேவன் தம்முடைய வார்த்தையில் அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார், நான் அதை விசுவாசிக்கிறேன். 10. இப்பொழுது, இது மிகவும் உஷ்ணமாக இருக்கிறது, நாம் சற்று முன்கூட்டியே துவங்கிவிட்டோம். நான் சற்று நேரம் உங்களிடம் பேச விரும்புகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, அவர்கள் சகோதரன் டாமி ஆஸ்பார்ன் அவர்களை அழைத்ததை நான் கேட்டேன். மேலும் நான்... அவர் இங்கே இருந்தால், ஏன்... அவர்... அவர் இல்லை என்றால், அவர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார், அவருடைய சகோதரன் இங்கே இருப்பாரானால். ஏன், அவர்... அவர் திரும்பி வந்து கொண்டிருந்ததாக அவர் என்னிடம் கூறினார். அன்றொரு இரவு நான் அவருடைய அறைக்கு சென்ற போது, ஜமைக்காவிலும், சுற்றிலுமிருந்து எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படங்களில் சிலவற்றை என்னிடம் காண்பித்தார். அந்தச் சிறு சகோதரன் உண்மையாகவே தேவனுக்காக கொஞ்சம் வேலைகளைச் செய்திருக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன். அது சரியே. நீங்கள்.... மேய்ப்பர்களாகிய உங்களில் யாராவது இங்கே, என்னுடைய - மனிதர்களைக் குறித்த என்னுடைய எண்ணங்கள் சரியாக இருக்குமானால், டாமி ஆஸ்பார்ன் அவர்கள் உங்கள் சபைக்கு வரும்படி, உங்களால் அவரைப் பிடிக்க முடியுமானால், அவர் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாகவே இருப்பார். அது சரியே அவர் உண்மையாகவே ஒரு - ஒரு, அவர் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவர், அவர் ஒரு தேவ மனுஷன். அவர்.... நான் அவரைக் கண்டேன். அவர் ஒருபோதும் ஜனங்களைத் தொட்டதேயில்லை என்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தெய்வீக சுகமளித்தலுக்கு என் மூலமாக மனம் மாறினவர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒருபோதும் ஜனங்களைத் தொட்டதில்லை என்று அவர் கூறினார். நான், சகோதரன் ஆஸ்பார்ன் அவர்களே, நீங்கள் எவ்வாறு அதைச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் வெறுமனே வார்த்தையை அவர்களுக்குக் கூறி, ஒரு ஜெபத்தைச் செய்கிறேன். அவர்கள் மேலே வந்து, சுகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். அவ்வண்ணமாக அவர்களை ஒருவர் மற்றவருக்காக ஜெபிக்க (வைக்கிறேன்” என்றார். 11. அன்றொரு இரவு, அங்கே அவரிடம் இருந்த ஒரு சிறு திரையில் நான் அதைக் கண்டேன், அங்கே ஒரு சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும் ஒரு எளிய வடிவத்தில் அவர் சுவிசேஷத்தை புரியும்படி சொன்னார். அப்போது அவர் அப்படியே, இப்பொழுது, நீங்கள் எல்லாரும் உங்கள் தலையைத் தாழ்த்தி, ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்” என்றார். அவரிடம் ஒரு சிறிய... இருந்தது. வெறுமனே கொஞ்சமாக, இரண்டு நிமிட நேர ஜெபம் தான். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவர்கள் சுகமடைந்த இடத்திலிருந்த, ஊன்றுகோல்களையும், படுக்கைகளையும் மற்ற எல்லாவற்றை யும் அவர்கள் மூலைகளில் அடுக்கி குவித்துக் கொண்டு இருந்தார்கள். பாருங்கள், வெறுமனே எளிய விசுவாசம். உங்களால் அதை அமெரிக்காவில் செய்ய முடியாது. ஓ, இல்லை. ஆனால் அமெரிக்காவில் நமக்கு இருக்கிற அதிக குழப்பம் இல்லாது இருக்கும் ஏதோவொரு இடத்திலுள்ள தேசத்தில் உங்களால் அதைச் செய்ய முடியும், அங்கே அவர்கள். 12. இப்பொழுது, நாம் சற்றே வார்த்தையின் பேரில் பேசுவோம். கர்த்தருக்குச் சித்தமானால், இங்கே யாத்திராகமம் 23-ம் அதிகாரத்தில் காணும் ஒரு சிறிய பொருளை எடுத்து, அதை உபயோகிக்க விரும்புகிறேன். இப்பொழுது, வேதாகமத்தைப் போதிக்கும் ஒரு - ஒரு போதகராக இருப்பதற்கு மிகவும் எளிய மாதிரியாகவே நான் இருக்கிறேன். சகோதரன் எர்ன் பாக்ஸ்டரும், சகோதரன் போஸ் அவர்களும், அவர்கள் உண்மையாகவே கல்விமான்களாக இங்கே இருக்கிறார்கள், நான் வார்த்தையை விளக்கிக் கூற முயற்சிப்பதற்கும், பிரசங்கம் பண்ண முயற்சிக்கவும் மிகவும் அற்பமானவனாகவே உணருகிறேன், நான் ஒரு பிரசங்கி அல்ல. ஆரம்பத்திலேயே, நான் எப்போதுமே ஒரு உபரி சக்கரம் (spare tire) என்று சொன்னேன் என்று நினைக்கிறேன். உங்களிடம் காற்று வெளியேறின ஒரு சக்கரம் இருக்கும் போது மாத்திரமே அவைகளை உபயோகிப்பீர்கள். ஆனால் இன்றிரவு காற்று வெளியேறின எந்த டயரும் (flat) நம்மிடம் இல்லை. நம்மிடம் ஏராளமான புத்திசாலிகள் இருக்கிறார்கள், ஆனால் நாம் ஒருக்கால் சற்றே இந்த உதிரி டயரை உருட்டுவோம். நீங்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள். 13. இப்பொழுது, யாத்திராகமம் 23-ம் அதிகாரத்தில், 20-ம் வசனம் தொடங்கி. நான் வெறுமனே ஒரு சில வசனங்களை வாசிக்கத் துவங்க விரும்புகிறேன். இப்பொழுது, இது மோசேயும் தேவனும் முகமுகமாய் பேசிக் கொண்டிருப்பதாக இருக்கிறது. இப்பொழுது, மோசேயைத் தவிர தேவனோடு முகமுகமாய் எப்பொழுதாவது பேசின ஒரு மனிதன் முழு பூமியிலும் ஒரு போதும் இருந்ததில்லை. ஆவிக்குரியவனாகவோ அல்லது ஒரு தீர்க்கதரிசியாகவோ இருக்கும் ஒருவன் அங்கே இருந்தால், கர்த்தராகிய நான் தரிசனங்களிலும் சொப்பனங்களிலும் என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன். ஆனால் என் தாசனாகிய மோசேயோ, நான் அவனோடு முகமுகமாய் பேசுகிறேன்.” பாருங்கள், நிச்சயமாக, அவன் கிறிஸ்துவுக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தான். இப்பொழுது, 20வது வசனம், இவ்விதமாக கூறுகிறது: வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து ..... அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நாம் பேசுகையில், நான் அப்படியே சற்று நெடுகிலும் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் இப்பொழுது வார்த்தைக்குக் கூர்ந்து, மிகவும் கூர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன். 14. பிதாவே, நீர் இப்பொழுது எங்களுக்கு உதவி செய்து, உம்முடைய ஆசீர்வாதத்தை எங்களுக்கு அருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுதும் கேட்டுக் கொண்டு இருக்கும் இந்தக் கூட்டத்தினர் தாமே, எந்த தெய்வீகமோ, அல்லது வேறு எந்த அடையாளமும் இல்லாமலேயே, அவர்கள் அப்படியே வார்த்தையை ஏற்றுக் கொள்வார்களாக. நீர் உம்முடைய வார்த்தையை அனுப்பி, அவர்களை குணமாக்கினீர். தேவனுடைய வார்த்தை தாமே இன்றிரவு ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் ஒரு இடத்தை கண்டுகொள்வதாக. இவர்கள் ஒவ்வொருவரும் தாமே, ஆவிக்குரியவிதமாகவும் சரீரபிரகார மாகவும் சுகமடைவார்களாக, நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இங்குள்ள இந்த மகிமையான புத்தகம், இப்பொழுது, தேவன், தாம் மோசேக்காக பிரயாணத்தில் என்ன செய்யப் போவதாக இருந்தார் என்பதை அவனிடம் கூறும்படிக்கு, அவனை ஸ்தானத்தில் பொருத்திக் கொண்டிருக்கிறார். இங்கே அவனை ஆயத்தப்படுத்தி, அவர் என்ன செய்வார் என்று அவனிடம் கூறி, அதன் பிறகு அவர் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவனைக் கொண்டிருப்பார் என்று அந்த ஆசீர்வாதங்களை கடைசியாக அவனிடம் கூறுகிறார். 15. இப்பொழுது, பழைய ஏற்பாட்டின் அந்த முன்னடையாளங்கள் எல்லாமே.... அவைகள் வரப்போவதாக இருந்த காரியங்களுக்கு நிழல்களாக இருந்தன. இப்பொழுது, அது இயற்கையான சபையாக இருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். எகிப்தை விட்டு பாலஸ்தீனாவிற்கு வெளியே கொண்டு வரப்பட்ட யூத சபையானது, இயற்கையான சபையாகவும், தேவனுடைய இயற்கையான ஜனங்களாகவும் இருக்கிறார்கள், பாருங்கள்? ஆனால் நாமோ இன்றைக்கு, நம்முடைய இருதயங்களின் பலகைகளின் மேல் எழுதப்பட்டு, ஒரு ஆவிக்குரிய வடிவில் வழிநடத்தின ஒரு ஆவிக்குரிய பிரமாணத்தைக் கொண்ட தேவனுடைய ஆவிக்குரிய சபையாக இருக்கிறோம். இப்பொழுது, அந்த அக்கினிஸ்தம்பம், கர்த்தருடைய தூதனானவர் எங்கே இருந்தார் என்பதைக் காண அவர்கள் மேலே நோக்கிப் பார்த்தார்கள். ஆனால் நாமோ இன்றைக்கு காண்பதில்லை. அவர் அங்கே இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளும்படியாக, அங்கே ஏதோவொன்று சம்பவித்து விடுகிறது. பாருங்கள்? இப்பொழுது, அவர்கள்... இருந்த எல்லாமும். இப்பொழுது, அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தார்கள். எகிப்தில் இருந்த ஜனங்கள், அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி பிரயாணத் தைத் துவங்குவது மட்டுமாக, அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தார்கள்; அப்போது அவர்கள் தேவனுடைய சபையாக ஆனார்கள். "சபை" என்ற வார்த்தைக்கு, "வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்று பொருள்படும். எனக்கு அது பிடிக்கும். "தனியாக வேறு பிரிக்கப்பட்டவர்கள்." தேவன், "பவுலையும் பர்னபாவையும் நான் அவர்களை அழைத்திருக்கிற வேலைக்கு வேறு பிரித்து விடு” என்று கூறினார். இப்பொழுது, இந்த... இன்றைக்கு சபைகளோ, அவைகளில் அநேகம், எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர்களை (mixers) தேடிக் கொண்டிருக்கிறது. கலந்து ஒருக்கால் இதில் கொஞ்சமும், அதில் கொஞ்சமும் செய்யக் கூடியவரையும், புத்துணர்ச்சிக்கு அனுபவிக்கும்படியாக கொஞ்சம் பொழுது போக்குகளை உடையவரையும், கோல்ஃப் விளையாடுபவரை யும், ஒருக்கால் ஒரு சில விருந்துகளையும் அதைப் போன்ற மற்றவைகளையும் உடைய யாரோ ஒருவரைத் தான் தேடிக் கொண்டிருக்கிறது. 16. இப்பொழுது, உலகமானது எல்லாரோடும் நன்கு பழகுபவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது, ஆனால் தேவனோ வேறுபிரிந்து வருபவர்களையும், தங்களைத் தாங்களே வேறு பிரித்துக் கொள்பவர்களையும் தான் தேடிக் கொண்டிருக்கிறார். "என் ஜனங்களே, நீங்கள் அவர்களுடைய பாவங்களுக்கு உடன்படாமல் இருக்கும்படிக்கு அவர்கள் நடுவிலிருந்து வெளியே வாருங்கள்." வேறு பிரித்துக் கொள்ளுங்கள்..... எகிப்தில், ஆட்டுக்குட்டியானது பலி செலுத்தப்பட்ட போது, தேவன் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணினார். அவர் இஸ்ரவேலர்களை புறஜாதிகளிடமிருந்து வேறு பிரித்து, அவர்களில் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணினார். தேவனுடைய ஜனங்கள் வேறுபிரிக்கப்பட்ட ஜனங்களாகவும், ஒரு பரிசுத்த ஜாதியாகவும், வினோதமான (புதுமையான, விசித்திரமான, அசாதாரணமான) ஜனமாகவும், விந்தையானதும், வினோதமாகவும் நடந்து கொள்ளுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே உலகம் ஒரு போதும் உங்களைப் புரிந்து கொள்ளவே புரிந்து கொள்ளாது. எனவே உலகத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம்; தேவனைக் குறித்தே சிந்தியுங்கள். அது தான் பிரதான காரியமாகும். 17. இப்பொழுது, இஸ்ரவேலர்கள் அங்கு போய்க் கொண்டிந்தது எவ்வளவு அழகான முன்னடையளமாக இருக்கிறது... பழைய ஏற்பாட்டை எடுத்து, அவைகளை வெளியே கொண்டு வந்து, அவைகளின் மேல் தேய்த்துப் பூசி, அதை நோக்கிப் பார்க்கும் படியாக, அங்கே பின்னாலுள்ள அந்தப் பழைய இயற்கையான தங்கக்கட்டிகள் (nuggets) எனக்குப் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாமே புதிய ஏற்பாட்டிற்கு முன்னடையாளமாக இருக்கிறது. இப்பொழுது, இஸ்ரவேல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டு, அவளுடைய பிரயாணத்தை செய்கையில், அது மூன்று கட்டங்களை உடைய பிரயாணமாக இருந்தது. அவையாவன. எகிப்தை விட்டு வெளியே வருதல், காதேஸ்-பர்னேயா, நியாயத்தீர்ப்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடந்து செல்லுதல். அது அப்படியே சரியாக மூன்று சபைகளாக இருக்கிறது. இருண்ட காலத்திற்குப் பிறகு, மூன்று சபைகள்...?... அதன் பிறகு அடுத்து பிலதெல்பியா சபையாக இருக்கிறது. பிறகு அடுத்து லவோதிக்கேயா சபை வருகிறது. அதன் பிறகு அவள் கடந்து செல்கிறாள். அழகாயுள்ளது. தேவன் எப்படியாக பூர்வநாட்களில், அக்கினி ஸ்தம்பமானது இஸ்ரவேல் பாளையத்துக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அதை கவனித்தார்கள். 18. அது... ஒருநாள் அங்கே தொங்கியிருக்குமானால், அவர்கள் ஒரு நாள் தங்கினார்கள், அது ஒரு வாரமோ, அல்லது ஒரு மாதமோ, அல்லது ஒரு வருடமோ தங்கியிருந்தால்..... ஆனால் அந்த அக்கினி ஸ்தம்பமானது போகத் துவங்குகையில், ஆயிரம் எக்காளங்கள் அங்கே முழங்கப்பட்டது. அது இரவு 12 மணியாக இருந்தாலும் அல்லது பிற்பகல் 2 மணியாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அப்போது ஒவ்வொரு இஸ்ரவேலனும் பாளையத்தை தகர்த்து, தன்னுடைய கூடாரத்தை ஒழுங்கு படுத்தி, தன்னுடைய முதுகில் வைத்துக் கொண்டு, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு விடுவார்கள்; அக்கினி (ஸ்தம்பம்) எங்கெல்லாம் போனதோ, அவர்களும் அங்கு சென்றார்கள். நாமும் இன்று அதையே செய்தால், அது ஒரு நல்ல காரியமாக இருந்திருக்காதா? ஆசீர்வாதத்தை பின்தொடருங்கள். நல்லது, இதோ அது இருக்கிறது. சரியாக இன்று நடந்து கொண்டிருப்பதும் அதே காரியம் தான். தேவன், இருண்ட காலங்கள் மற்றும் 1500 வருடங்களாக சபை அனுபவித்து வந்த அஞ்ஞானிகள் (புரிந்த மகா உபத்திரவத்திற்குப் பிறகு, மார்டின் லூத்தர் என்னும் பெயருடைய ஒரு மனிதன் அங்கே இருந்தார், அவர் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்பதைக் கண்டார். அவர் அக்கினிஸ்தம்பத்தைக் கண்டு, எக்காளத்தை ஊதினார். உடனே சபையானது புறப்பட்டு, அதைப் பின் தொடர்ந்து சென்றது 19. ஆனால் மார்டின் லூத்தருக்கு என்ன சம்பவித்தது, அவர் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு, லூத்தரன் சபை என்று அழைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது அவர்கள் தங்கள் சமயக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும், அதைப் போன்ற மற்றவைகளையும் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள், மேலும் காரியங்களை தர்க்கம் செய்யும் படிக்கும், தங்கள் சபையை ஒழுங்கில் வைக்கும் படிக்கும் அவர்கள் ஒரு கூட்டம் மனிதர்களை பெற்றுக் கொண்டார்கள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, சற்று கழிந்து, அக்கினிஸ்தம்பமானது அங்கிருந்து புறப்பட்டுப் போகும் அளவுக்கு, அவர்கள் மிகவும் சமயச் சடங்கு சம்பந்தமான காரியங்களையும் சம்பிரதாயப்படியானவைகளையும் பெற்றார்கள். ஆனால் லூத்தரால் போக முடியவில்லை, ஏனென்றால் முழுவதுமாக காலங்கடத்தி, உள்ளே வராமல் தடைசெய்திருந்த தம்முடைய கோட்பாடுகளையும் மற்றும் எல்லாவற்றையும் அவர் ஏற்கனவே உடையவராயிருந்தார். அவர்கள் - சபையானது அங்கிருந்து போக முடியாமல் இருந்த அளவுக்கு அவர் மிகவும் ஸ்தாபித்து விட்டிருந்தார். ஆனால் ஜான் வெஸ்லி என்ற பெயருடைய ஒரு சிறு பையன் அங்கே இங்கிலாந்தில் இருந்தான். அவன் அதைக் கண்டு, புறப்பட்டுச் சென்றான். 20. இங்கிலாந்தையே இரட்சித்த ஒரு எழுப்புதலை அவர் உடையவராயிருந்து, அமெரிக்காவுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்து, அந்த நாளில் உலகத்திற்கு உதவி செய்தார். அவர் புறப்பட்டுச் சென்றார். அது தான் பிலதெல்பியா காலம். மேலும் ஒரு.... அவர்களுக்கு என்னவொரு நேரம் உண்டாயிருந்தது. அவர், "நாம் ஒரு புதிய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டோம்” என்று கூறினார். அது என்ன?” "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.” அது உண்மை. ஆனால் அதோடு கூட, இயேசு தம்முடைய இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும்படியாக, நகரவாசல்களுக்குப் புறம்பே பாடுபட்டார். எனவே, "நாங்கள் பரிசுத்தமாக்கப் படுதலை விசுவாசிக்கிறோம், அது கிருபையின் இரண்டாவது உறுதியான கிரியையாக இருக்கிறது" என்று மெதோடிஸ்டுகள் கூறினார்கள். முழு தேசத்தையும் வீசியடித்துச் செல்லும்படியான ஒரு எழுப்புதலுக்கு அவர் காரணமாக இருந்தார். ஆனால் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஜான், சார்லஸ், ஆஸ்பரி மற்றும் அவர்களில் அநேகர் மரித்த பிறகு, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரித்துப்போன உடனே, ஸ்தாபனங்கள் உள்ளே வரத் துவங்கினது, மெதோடிஸ்டு சபையானது மிகவும் விறைப்பாக ஸ்தாபிக்கப்பட்டு, அது மெதோடிஸ்டு சபையா அல்லது வெறுமையான சபையா-? என்னும் அளவுக்கு, மெதோடிஸ்டு சபையை ஸ்தாபித்துக் கொண்டார்கள். 21. எனவே பிறகு முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் முழுவதுமாக கீழான நிலைக்குப் போய்விட்டனர். ஒரு புதிய கூட்டத்தார் மேலே வருகிறார்கள், வேறொரு புதிய கூட்டத்தினர் மேலே வருகிறார்கள், அப்படியே மூன்று அல்லது நான்கு சுற்று அப்போஸ்தலர்கள் அங்கே இருந்தது போலவே. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அது முழுவதுமாக சடங்காசாரமான நிலையில் தூரமாகப் போய், இங்கே இருக்கிறார்கள், எந்த ஆவியும் இல்லை. அப்போது அக்கினிஸ் தம்பம் வெளியே போய் விட்டது. அது சரியே. மெதோடிஸ்டுகளால் அசையவே முடியவில்லை. அவர்கள் ஸ்தாபனத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். நாங்கள் மெதோடிஸ்டு களாக இருக்கிறோம்." முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, பெந்தெகோஸ்தே- யினர் என்று அழைக்கப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு புதிய வெளிப்பாடு கிடைத்தது. கர்த்தர் பரிசுத்த ஆவியை பெரிய அளவில் ஊற்றினார். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். இதோ அவர்கள் போகிறார்கள். என்னே, நீங்கள் ஒரு எழுப்புதலைக் குறித்துப் பேசுகிறீர்களா? அவர்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது. ஆம், ஐயா மெதோடிஸ்டுகளுக்கு அது தேவையில்லாதிருந்தால், அவர்கள் அமைதியாக இருக்கட்டும். அது சரியே. 22. நல்லது, அது சிறிது காலமாக, அவ்விதம் போய்க் கொண்டு இருந்தது, பெந்தெகோஸ்தேயினரும் ஸ்தாபனம் ஏற்படுத்தத் துவங்கினார்கள். அசெம்பிளிஸ் ஆப் காட் , ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள், திரித்துவக்காரர்கள், நான்குத்துவக்காரர் கள், ஐந்துத்துவக்காரர்கள், எந்த மாமிசமும் புசிக்காதவர்கள், மேலும் எல்லாருமே.... ஓ, என்னே !.... முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் தேவனுடைய எல்லா வல்லமைகளையும் மறுதலிக்கத் துவங்கும் அளவுக்கு அவர்கள் மிகவும் விறைப்பாக ஸ்தாபித்துக் கொண்டார்கள். தேவனோ அவைகளை அலமாரியில் வைத்து விட்டார். அது தான் லவோதிக்கேயா சபைக்காலம், அது வெதுவெதுப்புள்ளதாக இருக்க வேண்டியிருந்தது. இசையானது இசைத்துக் கொண்டிருக்கையில், கரங்களைத் தட்டி, சற்று உரக்க கத்துவார்கள், இசையானது நின்றுவிடும் போது, அது கீழே போய்விடும். 23. இப்பொழுது, சகோதரனே, இன்றறிரவு இங்கே பிரசங்க பீடத்தில், நான் உங்கள் தகப்பனாக (pappy) அல்லது அப்பாவாக இருக்கிறேன். புரிகிறதா? அது சரியே. எது சரியோ அது சரியாகவும், எது தவறோ அது தவறாகவும் இருக்கிறது. அவர்களில் மற்ற எவரையும் போலவே பெந்தெகோஸ்தேகாரர் களும் சம்பிரதாயமாகவும் சடங்காசாரமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. ஆனால் என்ன சம்பவித்தது? சகோதரனே, இப்பொழுது எல்லா வித்தியாசமான ஸ்தாபனங்களிலிருந்தும் வந்திருக்கிற ஒரு கூட்ட ஜனங்கள் அங்கேயிருந்து, அக்கினி ஸ்தம்பம் மறுபடியு மாகப் போவதைக் காணத் தொடங்குகிறார்கள். அவர்கள் அவைகளை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தான் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன், தேவன் தம்முடைய சபையை அழைத்துக் கொண்டிருக்கிறார். வேதவாக்கியத்தைக் குறித்து நான் அறிந்த வரையில், என்னுடைய நியாயதிபதியாகிய தேவன் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கிறார். அங்கே வேறொரு சபைக் காலம் ஸ்தாபிக்கப்படவே ஸ்தாபிக்கப்படாது. இயேசு கிறிஸ்து வந்து தம்முடைய சபையை வெளியே கொண்டு சென்றுவிடுவார். அது சரியே. மோசே சபைக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தான், ஸ்தாபனத்திற்கு, நியாயப்பிரமாணத்திற்கு ஒரு முன் அடையாளம். ஆனால் மோசே தேவனை மகிமைப்படுத்து வதற்குப் பதிலாக, தன்னைத்தானே மகிமைப்படுத்தினான், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடந்து செல்வதற்கு முன்பாக, அது ஒரு பரிபூரண முன்னடையாளமாக இருந்தது. இன்றிரவு மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், பெந்தெகோஸ்தேயினரும், லூத்தரன் களும், மற்றும் எல்லாருமே சரியாக அதைத் தான் செய்து இருக்கிறார்கள். யாரால் மிகப்பெரிய கூட்டத்தைக் கொண்டு இருக்க முடியும் என்றும், மிகச்சிறப்பாக உடையணிந்தவர் களையோ, அல்லது மிக அருமையான இருக்கைகளையோ கொண்டிருக்க முடியும் என்றும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் வெளியே போகும் அளவுக்கு அவர்கள் தங்கள் ஸ்தாபனத்தை மகிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே 24. ஆனால் யோசுவா எல்லா நேரமும் சபையில் சரியாக இருந்தான் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களை அங்கே கொண்டு சென்ற ஒருவன் அவன் தான். மேலும் இன்றைக்கு, சபையில் இருந்துவருகிற, அதே அடையாளங்களும், அற்புதங்களும், ஆச்சரியமான காரியங்களும்..... எந்தக் காலத்தினூடாகவும் அவர்கள் ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்த ஒவ்வொரு முறையும், இந்த அடையாளங்கள் சபையில் வெடித்துக் கிளம்பின. தொடர்ந்து இந்த சபைக்காலங்கள் எல்லாவற்றினூடாகவும் அவைகள் இருந்து வருகின்றன. துவக்கம் முதல் முடிவு வரைக்குமாக, யோசுவா மோசேயோடு கூட வந்தது போன்று. ஆனால் சபைக்காலமானது மோசேயோடு முடிந்து போய்விட்டது, யோசுவா தான் தேவனுடைய பிள்ளைகளை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அழைத்துக் கொண்டு சென்றான். இந்தக் காலம் இப்பொழுது வந்திருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அற்புதங்களும், வழக்கத்துக்கு மாறான அதிசயமான காரியங்களும், ஆவியின் ஞானஸ்நானமும், வல்லமையும், அடையாளங்களும், அற்புதங்களும், கடைசி நாட்களில் தேவனுடைய ஆவியின் இந்த மகத்தான ஊற்றப்படுதல், சபையை மகிமைக்குக் கொண்டு செல்லும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற ஒரு விசுவாசம் தேவைப்படும் ஜனங்களுக்குள் விசுவாசத்தைக் கொண்டு வரும் காரியம் அதுவாகத்தான் இருக்கிறது. நான் அதை விசுவாசிக்கிறேன். 25. சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விசுவாசம் கூட நமக்கு இல்லாமல் இருக்கும்போது, சபையானது எவ்வாறு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட முடியும்? நாம் முதலில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தைக் கொண்டிருந்தாக வேண்டும். அது சரியே. தேவன் எப்படியாக தம்முடைய ஆவியின் மூலமாக அசைவாடி, அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடருகின்றன. எல்லாவிடங்களிலும் தேவன் அசைவாடத் தொடங்குகிறார், அடையாளங்களும் அற்புதங்களும் தேவனைப் பின்தொடருகின்றன. உலகம் எப்போதுமே தூரமாக நின்று அதை குறைகூறித்தான் இருக்கிறது.... ஆதாம் தொடங்கி, கீழே, அவர்கள் ஒவ்வொரு முறையும் அதைத் தான் செய்திருக்கிறார்கள். நீங்கள் குற்றங் கண்டு பிடிக்கப்படுவது... அது - அது இன்றைக்கு புதிதான எதுவுமல்ல, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வது, மேலும் அவருடைய… 26. இப்பொழுது, நீங்கள் அதை ஏதோவொரு மதவெறித்தனத்தில் ஏற்றுக் கொண்டாலோ, அல்லது - அல்லது தவறான காரியத்திற்காக உபத்திரவப்பட்டாலோ, ஏன், அது உங்களுக்கு ஏற்றது தான். ஆனால் இப்பொழுது பாருங்கள், நீங்கள் உண்மையாகவே அதை உடையவர்களாக இருந்து, தேவன் உங்களோடு கிரியை செய்து, அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் கொண்டு, சாட்சி பகர்ந்து, வேதாகமத்தின் மூலமாக தம்மைத் தாமே நிரூபித்துக் கொண்டிருப்பாரானால், நீங்கள் களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷப்படுங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் (reward - சன்மானம், பரிசு, வெகுமானம், கைம்மாறு) மிகுதியாயிருக்கும். மோசே தன்னுடைய பிரயாணத்தில் இருந்து, இஸ்ரவேல் புத்திரர்களை கொண்டு சென்றான், தேவன் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். இப்பொழுது, தேவன் இயற்கையான விதமாக அதை வழிநடத்தினது போல, இவர் இன்றும் சபையை ஆவிக்குரிய விதத்தில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, அவர்கள் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள், ஒரு பெருங்குழப்பத்தை விட்டு ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போய்க் கொண்டிருந்தார்கள், பொருத்தமற்ற (தவறான) காரியத்தை விட்டு உன்னதமான காரியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். 27. அது இன்றைக்கு இருப்பது போன்று தான். நாம் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு, "என் பிதாவின் வீட்டில் அநேக மாளிகைகள் (mansions - பெரிய வீடுகள்) உண்டு” என்று சொல்லியிருக்கிறார். அது சரிதானா? "நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்வேன், நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளும் படிக்கு, நான் மறுபடியும் வருவேன்." நாம் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம். ஓ, அது எப்படியாக என்னுடைய இருதயத்தை சிலிர்ப்பூட்டுகிறது. நான் அதைக் காணத் துவங்கும்போது, என்னுடைய தோள்கள் அப்படியே வளைந்து (swaging down), இப்பொழுது எவ்வளவு காலம் என்று தெரியவில்லையே என்று அறிந்து கொள்கிறேன். அதை அறிந்துகொள்ள என்னிடம் எந்த வழியுமேயில்லை . ஆனால் இந்த ஒரு காரியம் எனக்குத் தெரியும், சுவாசம் இந்த சரீரத்தை விட்டுப்போன பிறகு, நான் இயேசு கிறிஸ்துவுக்குள் உண்மை உள்ளவனாக இருந்தால், ஏதோவொரு நாளில், அதோ அங்கேயுள்ள அந்த தேசத்திற்குள் கடந்து செல்வேன். 28. சமீபத்தில், பில்லியும் நானும்.... அவன் ஒரு சின்னஞ்சிறு பையனாக இருந்தான், நான் அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். நாங்கள் ஈஸ்டர் காலையில், அவனுடைய தாயின் கல்லறைக்கு இறங்கிச் சென்றோம். அவன் தன்னுடைய கையில் ஒரு சிறு மலரை பொதிந்து வைத்திருந்தான். அவன் தன்னுடைய சிறு தொப்பியைக் கழற்றினான். அப்போது அவனுக்கு ஏறக்குறைய எட்டு வயதாக இருந்தது. உடனே அவன் கீழே வைத்து விட்டு, அழத் தொடங்கினான். அவன் தன்னுடைய தாயும் சிறு சகோதரியும் அந்தக் கல்லறையில் இருப்பதை அறிந்து கொண்ட போது. நான் அந்தச் சிறு மகனைச் சுற்றிலும் என்னுடைய கரத்தைப் போட்டு, கல்லறையின் மேல் மலரை வைத்தேன், அது பழைய மலிவான சிறு மலராக இருந்தது. எங்களால் மிக அதிகமான செலவைத் தாங்கிக் கொள்ள (afford) முடியாதிருந்தது. நான் என்னுடைய கரத்தை அவனைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, "தேனே, அம்மாவின் சரீரமும் சகோதரியின் சரீரமும் இங்கே கல்லறையில் கிடக்கிறது. ஆனால் நீ அதைப் பார்க்காதே. அதோ அங்கே அந்த ஆற்றையும் தாண்டி நோக்கிப் பார்; அங்கே எருசலேமில் ஒரு காலியான கல்லறை இருக்கிறது, அங்கே ஒருவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார், அவர்கள் அவருக்குள் மரித்திருக்கிறார்கள். மேலும் அவர், அவருக்குள் மரித்தவர்களை தேவன் தம்முடைய வருகையில் அவரோடு கூட கொண்டு வருவார்' என்று சொல்லியிருக்கிறார்” என்றேன். ஆம், ஐயா. 29. ஏதோவொரு நாளில் அந்தக் கல்லறை திறக்கும். ஆம், ஐயா. நான் இன்றிரவு இந்த மேடையில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயதோ அவ்வளவு நிச்சயமாக, அந்த அழகான வாலிப பெண்ணாகிய தாய் தன்னுடைய குழந்தையோடு கூட அந்தக் கல்லறையை விட்டு வெளியே நடந்து வருவாள். முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்." அவள் போன போது, நான் அவளிடம் கூறின கடைசி வார்த்தைகள், அவள் கூறினாள். நாங்கள்... பெந்தெகோஸ்தேயில் பரிசுத்த ஆவியின் வல்லமையானது... அவள் அந்தக் காலையில் மரித்துக் கொண்டிருந்தாள். அவள், ஓ, அது மிகவும் மகிமையாக இருக்கிறது" என்று கூறினாள். ஓ, எப்படியாக.... என்னவொரு... அந்தவிதமாகத்தான் நான் போக விரும்புகிறேன். மிகவும் அற்புதமாக உள்ளது'' என்றாள். அவள், வாசல்கள் திறக்கப் படுவதை நான் காண்கிறேன். என்னே, எவ்வளவு அழகாயுள்ளது” என்றாள். ஒரு மனிதன் எப்பொழுதாவது நேர்மையாக இருப்பான் என்றால், அது அவன் மரித்துக் கொண்டிருக்கும் போது தான். அவர்கள் எல்லா விதத்திலும் மரித்துக் கொண்டிருப்பதைக் கவனித்து இருக்கிறேன். அப்போது அதைப் பார்த்து, அவள், "பில், எனக்கு ஒரு வாக்குக்கொடுங்கள்” என்றாள். "அது என்ன?” "மரணம் உங்களை விடுவிக்கும் வரைக்கும் இந்த மகிமையான சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள் என்றாள். நல்லது, அது அநேக வருடங்களுக்கு முன்பு, நான் இன்னும் இன்றிரவும் அந்த யுத்தகளத்தில் தான் இருக்கிறேன். ஆம், ஐயா, நாம் அந்த தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால், நான் எப்பொழுதாவது என்னுடைய முழு ஜீவியத்தில் இருந்ததைக் காட்டிலும், இன்னும் அதிகமாக தீர்மானித்து விட்டேன். ஏதோவொரு நாளில், நாம் அந்த வாசல்களுக்குள் பிரவேசிப்போம். 30. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இப்பொழுது தேவன் மோசேயிடம் பேசி.... நீங்கள் இங்கிருந்து போவதற்கு முன்பாக, இதை சற்றே முன்னர் குறிப்பிட்ட அதற்குத் திரும்பி வர நேரம் இருந்திருக்க விரும்புகிறேன், அவர்கள் எப்படியாக எகிப்திற்குள் போனார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். தேவன் ஆபிரகாம் வழியாக தீர்க்கதரிசனம் உரைத்திருந்து, அவனுடைய சந்ததி அந்நிய தேசத்தில் 400 ஆண்டுகள் பரதேசிகளாக இருப்பார்கள் என்றும், அதன் பிறகு அவர் அவர்களை பலத்த கையினால் வெளியே கொண்டு வருவார் என்றும் கூறியிருந்தார். மோசே எப்படியாக எகிப்திற்குள் சென்று அவர்களை வெளியே கொண்டு வந்தான். எப்படியாக... அவர்கள் வெளியே போவதற்கு முன்பாக.... அவர்கள் எப்படியாக அங்கே தாழ்த்தப்பட்டு இருந்தார்கள். கிறிஸ்துவுக்கு பரிபூரண முன்னடையாளமாக இருந்த யோசேப்பு எப்படியாக.... அவன் எப்படியாக தன்னுடைய சகோதரர்கள் மத்தியில் பிறந்து அவனுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, அவனுடைய தகப்பனால் சிநேகிக்கப்பட்டான், பல்வர்ண அங்கியும், உயர்ந்த ஸ்தானமும்.... அவர்கள் ஏன் அவனை வெறுத்தார்கள்? அவன் ஒரு ஞான திஷ்டிக்காரனாக இருந்த காரணத்தினால் தான். அவனால் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லவும், தரிசனங்களைக் காணவும் முடிந்தது. அவன் நீதிமானாயிருந்த காரணத்திற்காக அவர்கள் அவனை வெறுத்தார்கள். அவ்வண்ணமே இயேசு ஆவிக்குரியவராயிருந்த காரணத்தினால் அவர்கள் அவரை வெறுத்தார்கள். அவர்கள் அவரை பெயல்செபூல் என்று அழைத்தார்கள். மறுபடியும் பிறந்த விசுவாசிகளிடத்தில் அசைவாடுகிற தேவனுடைய ஆவியின் நிமித்தமாக, அந்த ஒன்று விட்ட உடன் பிறந்த சகோதரர்களும் சகோதரிகளுமாகிய அவர்கள் இன்று அவருடைய சபையையும் வெறுக்கிறார்கள். மேலும் கவனியுங்கள், ஒரு நீதியான காரணத்தினிமித்தமாக, அவர்கள் அவனை வெறுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் அவனைக் கொன்று, அவனை ஒரு குழியில் போட்டுவிட கருதினார்கள். இயேசு மேலே எடுக்கப்பட்டு, பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தது போன்று, அவனும் மேலே எடுக்கப் பட்டு, பார்வோனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தான். யோசேப்பின் மூலமாகவே அன்றி எவனும் பார்வோனிடம் வர மாட்டான். கிறிஸ்துவின் மூலமாகவே அன்றி ஒருவனும் தேவனிடம் வருவதில்லை . 31. சிறைச்சாலையில் அவனுக்கு நேர்ந்த சோதனையில் அவனைக் கவனியுங்கள், அங்கே ஒரு இறைச்சிக் கடைக்காரனும் (butcher), பானபாத்திரக்காரனும் இருந்தார்கள். மேலும்... அல்லது ஒரு சுயம்பாகியும் (baker), பான பாத்திரக்காரனுமாக அது இருந்தது. அவர்களில் ஒருவன் இழக்கப்பட்டான், அவர்களில் ஒருவன் இரட்சிக்கப்பட்டான், என்ன சம்பவிக்கும் என்று யோசேப்பினாலே முன்னுரைக்கப்பட்டிருந்தது. இயேசு தாம் சிலுவையில் இருந்த போது, அங்கே ஒரு பக்கத்தில் ஒரு கள்ளனும், மறு பக்கத்தில் இன்னொரு கள்ளனுமாக தொங்கிக் கொண்டிருந்தார்கள், ஒருவன் இழக்கப்பட்டான், ஒருவன் இரட்சிக்கப்பட்டான். பரிபூரமாக. ஓ, நம்மால் வைத்திருக்க முடியாது. மேலும் கவனியுங்கள், அவன் புறக்கணிக்கப்பட்டதின் நிமித்தமாக, அவன் தன்னுடைய சகோதரர்களிடமிருந்து தூரமாகப் போய், ஒரு புறஜாதி மணவாட்டியை விவாகம் செய்து கொண்டான். நான் புறஜாதியிலிருந்து என்னுடைய நாமத்திற் காக ஒரு - ஒரு ஜனத்தை வெளியே எடுத்துக்கொள்வேன்” என்ற வேத வாக்கியத்தை நிறைவேற்றும்படியாக, இயேசுவும் யூதர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அவர் ஒரு புறஜாதி மணவாட்டியை பெற்றுக் கொண்டார். அங்கே தான் காரியம். இப்பொழுது சரியாக முடிவு நேரத்தில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம், நிழல்கள் எல்லாவிடங்களிலும் விழுந்து கொண்டு இருக்கின்றன. 32. ஓ, நான் எப்படியாக அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். மேலும் நான், அன்புள்ள தேவனே, என்னால் என்ன செய்ய முடியும்? எல்லா இடங்களிலும் பெரும் தேவையுள்ளதையும், கதறிக் கொண்டே, 'மக்கதோனியாவுக்கு வாருங்கள்' என்றும் எல்லா இடங்களிலும் அழைப்பு விடுப்பதைக் காணும்போது, என்னுடைய இருதயம் எரிகிறது. நாங்கள் என்னச் செய்யப் போகிறோம்?” என்று நினைக்கிறேன். அப்போது நான் இவ்வாறு சிந்திக்கிறேன், "கர்த்தாவே, நான் எங்கேயிருந்தாலும், இரட்சிக்கப்படாதவர்களையும் தேவபக்தி அற்றவர்களையும் நோக்கி ஒரு ஜீவக்கயிற்றை (lifeline) எறிய முயற்சிக்க என்னால் முடிந்த சிறந்ததைச் செய்வேன்” என்று. ஆனால் நண்பர்களே, ஒரு காரியத்தை உங்களிடம் கூறுகிறேன், அது நியாயமாக இல்லை. எல்லா பிரசங்கிமார்களும் இங்கே அமெரிக்காவிலேயே தங்கியிருந்து, சுவிசேஷத்தை ஜனங்கள் இடம் மீண்டும் மீண்டுமாக, மீண்டும் மீண்டுமாக பிரசங்கம் பண்ணுகிறோம், உலகத்தில் பாதி ஜனங்கள், ஏறக்குறைய அவர்களில் மூன்றில் இரண்டு பாகம் ஜனங்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரையும் ஒரு போதும் கேள்விப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். 33. நாம் இங்கே ஒரு மந்தையிடத்திலேயே தங்கியிருந்து, நீங்கள் சுவிசேஷத்தைக் (குறித்து) உணர்வற்று கடின நெஞ்சம் கொண்டவர்களாக ஆகும் அளவுக்கு அதைப் பிரசங்கம் பண்ணி விட்டீர்கள், பிறகு அதோ அங்கே வெளியிலுள்ள அஞ்ஞானிகளோ (heathens) மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் என்னுடைய தரிசனமாக இருக்கிறது. நான் கட்டாயம் அவர்களிடம் போயாக வேண்டும். அங்கே தான் தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் பசியாயிருக்கிறார்கள்; அவர்கள் தாகமாய் இருக்கிறார்கள்; அவர்கள் ஏதோவொன்றைக் கேட்க விரும்புகிறார்கள். ஆகையால் தான் நான் அவ்வண்ணமாக டாமி ஆஸ்பார்ன் அவர்களோடு இருக்கிறேன். அவருக்கும் அதே தரிசனம் உள்ளது. சுவிசேஷத்தை வெளியே கொண்டு செல்வது. நாம் அதைச் செய்தாக வேண்டும். அதற்காக பதில் சொல்லும்படி தேவன் நம்மை பொறுப்பாளியாக்கப் போகிறார். பிரயாணம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. இப்பொழுது, நான் கவனிக்கிறேன், தேவன் இங்கே மோசேயிடம் பேசி, "வழியில் உன்னைக் காக்கிறதற்கு நான் உனக்கு முன்னே ஒரு தூதனை அனுப்பப் போகிறேன்” என்று கூறினார். எனக்கு அது பிடிக்கும். ஆமென். இப்பொழுது, மோசேயை சந்தித்த, அல்லது மோசேயை வழி நடத்தின் அந்தத் தூதனானவர் உடன் படிக்கையின் தூதன், அது அக்கினி ஸ்தம்பமாகிய இயேசு கிறிஸ்து என்று யாருக்காவது தெரியுமா. அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போது அந்த ஒன்றை வழிநடத்தின அதே தூதனானவர் தான் இன்று இந்தச் சபையையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா. ஓ, பயந்து விடாதீர்கள். "அல்லேலூயா” என்பதற்கு "நம்முடைய தேவனைத் துதியுங்கள்" என்று அர்த்தமாகும். அவர் அவை எல்லாவற்றிற்கும் பாத்திரராயிருக்கிறார். அது.... ஆமாம். 34. இப்பொழுது நான் அவரைப் பார்க்கிறேன்; அவர், "இப்பொழுது, பொறு. நான் இந்த தூதனை அனுப்பப் போகிறேன், இந்த நேர முதற்கொண்டு, நீ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வருவது மட்டுமாக, அவர் உன்னை வழி நடத்துவார்” என்றார். பெந்தெகோஸ்தே நாள் தொடங்கி, நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் மட்டுமாக சபையை வழிநடத்தும் படியாக, தேவன் பெந்தெகோஸ்தே நாளில் நமக்கு பரிசுத்தாவியைக் கொடுத்தார். அவரைக் கவனித்துப் பாருங்கள், அவர், "அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிரு , அவரைக் கோபப்படுத்தாதே. உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை. என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது" என்று கூறினார். நிச்சயமாக, அது அவ்வாறு தான் இருந்தது. தேவனுடைய தூதனானவர், இயேசு கிறிஸ்து, இன்று சபையை வழிநடத்துகிற அதே ஒருவர். அவர் அப்போது ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார், அவர் இப்பொழுதோ ஆவியின் வடிவத்தில் இருக்கிறார், ஆனால் அது அதே தூதனானவர் தான், அதே ஜீவன் தான். 35. இப்பொழுது, நாம் சற்று கவனிப்போம். பிறகு அவர்கள் தங்களுடைய பிரயாணத்தைத் தொடங்கின உடனே, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, இந்த - இந்த தண்ணீரானது நன்றாக இல்லாதிருக்கிறது என்பதைக் குறித்தும், அவர்களுடைய அப்பத்தைக் குறித்தும் அவர்கள் முறையிடவும் முறுமுறுக்கவும் தொடங்கினார்கள், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டே, தேவனுக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறையிட்டுக் கொண்டும், குறைகூறிக் கொண்டும் இருந்தார்கள். இன்றைக்கு சபையின் மிகவும் குறிப்பிடத்தக்க பாகம் அதுவாகத்தான் இருக்கிறது. அது ஒருபொருட்டல்ல, தேவன் இறங்கி வந்து, தம்முடைய ஆசீர்வாதங்களை சபையின் மேல் ஊற்றி, ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்; முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர் தொடர்ந்து அந்த ஆசீர்வாத மானது அசைவாடும்படியாக செய்யாமல், ஒவ்வொரு இரவும் அவ்வாறு போய்க் கொண்டிருக்குமானால், ஜனங்கள்--- போய் விடுவார்கள். ஏதோவொரு சிறிய விபத்து அவர்களுக்கு வருமானால், அவர்கள் திரும்பவும் விழுந்து போன நிலைக்கே போய் விடுவார்கள். "நல்லது, நான் ஒருக்கால் சற்று உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம்." 36. ஓ, உங்கள் விசுவாசம் எங்கே? அதை தேவனிடத்தில் பற்றிக் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு போதும் அதை மீண்டும் உணராமலோ, அல்லது அதை மீண்டும் காணாமலோ, அல்லது வேறு எதுவும் இல்லாமல் இருந்தாலும், உங்கள் விசுவாசத்தை தொடர்ந்து அதோ அங்கேயே நங்கூரமிட்டிருங்கள். எவ்வளவு அற்புதமாயுள்ளது. இப்பொழுது அவரைக் கவனியுங்கள். அவர்கள் அங்கே போனபோது, கொஞ்சம் தொல்லைக்கு உள்ளானார்கள். அவர்கள் கொஞ்சம் தண்ணீரை விரும்பத் துவங்கினார்கள். தேவன் அவர்களிடம் கூறினார், அவர்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் அளிப்பதாகவும், தூதனானவர் வழி நடத்துவார் என்றும் தேவன் கூறியிருந்தார். மோசே அவர்களிடம் கூறினான், அவன், "இஸ்ரவேலர் எல்லாரையும் அதோ அங்கே வெளியில் கூட்டுங்கள், நான் தேவனுடைய மகிமையை உங்களுக்குக் காண்பிப்பேன்” என்று கூறினான். தேவன் அவனிடம் கூறி, அவர்களை வெளியே கூட்டி, அந்தக் கன்மலையைப் பார்த்து பேசு, அப்பொழுது அது அதனுடைய தண்ணீர்களைக் கொடுக்கும்” என்றார். ஜனங்களோ முறையிட்டுக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தூதர்களுடைய ஆகாரத்தைப் புசிக்கும்படிக்கு, எகிப்திலுள்ள வெள்ளைப் பூண்டு பானைகளை விட்டு வந்திருந்தார்கள், அவர்கள் கன்மலையிலிருந்து, ஒருபோதும் தீர்ந்து போகாத (never runs dry) நீரூற்றிலிருந்து பருகும்படியாக, எகிப்திலுள்ள சேற்றுத் தண்ணீர்களை விட்டு வந்திருந்தார்கள். அது தூதர்களால் தொடவும் முடியாத தண்ணீர்களாக இருந்தது, இருப்பினும் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மகத்தான வைத்தியரோடு இருக்கும்படியாக, எகிப்திலுள்ள வீண்பெருமை பேசும் வைத்தியர்களை விட்டு வந்திருந்தார்கள், இருப்பினும் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அது அப்படியே ஜனங்களைப் போன்று இல்லையா? அவ்விதமாகத்தான் அவர்கள் அதைச் செய்கிறார்கள்: இன்னுமாக முறையிட்டுக் கொண்டு இருந்தார்கள். 37. எனவே தேவன் மோசேயிடம் பேசி, "இந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசு” என்றார். அப்பொழுது அந்தக் கன்மலை அதைக் கொடுத்தது... அங்கே இருந்ததிலேயே மிகவும் வறண்ட இடம் அந்தக் கன்மலையாகத்தான் இருந்தது, அந்த வனாந்தரத்தி லேயே மிகவும் வறண்ட காரியம் அதுதான். எங்கே தண்ணீர் இருக்கிறது என்று அந்த குட்டைகள் எல்லாவற்றினூடாகவும், எங்கே தண்ணீர்கள் இருக்கிறது என்று அந்தப் பாலைவனச் சோலையினூடாகவும் தேடிப் பார்த்தாலும், இன்னுமாக எந்தத் தண்ணீரும் இல்லாதிருந்தது, அப்போது அந்தக் கன்மலையிடம் பேசினான். அங்கே தண்ணீரிலிருந்து மிக தூரமாக வறண்டு போனதும், மிக தொலைவில் இருப்பதும் ஒரு கன்மலை தான். நல்லது, அது தரையின் மேல் கிடந்தது. ஆனால் மிக மோசமாக காணப்பட்ட அந்தக் காரியத்தைப் பார்த்து, அந்தக் கன்மலையைப் பார்த்து, பேசும்படி தேவன் சொன்னார். இன்று சிலநேரங்களில், அவர்கள், நல்லது, தேவன் வரங்களைக் கொடுத்திருந்தால், அவர் அதை வத்திக்கான் பட்டணத்தில் வைத்திருப்பாரே. அவர் அதை இந்தப் பெரிய பிரதான தேவாலயங்களில் வைத்திருந்திருப்பாரே. ஏன் அவர் அதை ஒரு கூட்ட பரிசுத்த உருளையர்கள் மத்தியில் வைத்திருந்திருக்க மாட்டாரே” என்று கூறலாம். ஆனால் அங்கே தான் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். அது சரியே. உலகத்திலேயே மிக மோசமான இடம், அங்கு தான் தேவன் தம்முடைய ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார். அது முற்றிலும் உண்மை. அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசு, அது அதனுடைய தண்ணீர்களைக் கொடுக்கும்." 38. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அவர் சொன்னார். இப்பொழுது, நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்லுவதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக் களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதி-யாயும் இருப்பேன். (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.) என் தூதனானவர் உனக்கு முன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டு போவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன். இப்பொழுது, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, தேவன், "பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசம் அங்கே உள்ளது, நான் அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன், அது உங்களுடையது. ஆனால் இப்பொழுது, நீங்கள் அதற்குள் போகும் முன்பு, நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது (ஒலிநாடாவில் காலியிடம்- ஆசிரியர்.). நீங்கள் அதற்கு போகும் முன்பாக, எல்லா ஏவியர்களையும், எபூசியர்களையும், இந்த மற்ற எல்லா வித்தியாசமான 'இர்களையும் செய்தாக வேண்டியிருக்கிறது என்றார். 39. இப்பொழுது, அது வினோதமாக இருக்கிறது, இல்லையா? இப்பொழுது, இன்றைக்கும் ஜனங்கள் அதே காரியமாகத்தான் இருக்கிறார்கள். தேவன் தெய்வீக சுகமளித்தலுக்கான ஒரு வாக்குத்தத்தத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் தெய்வீக ஆரோக்கியத்திற்கான ஒரு வாக்குத்தத்தத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் உங்களுக்கு இந்த எல்லா வாக்குத்தத்தங்களையும் கொடுத்திருக்கிறார், ஆனால் அதிலிருந்து உங்களைத் தாக்கி, அகற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கும் சத்துருவுக்கு முன்னே தைரியமாக எதிர்த்து நிற்பதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். அது முற்றிலும் சரியே. தேவன், "நீங்கள் அவர்களுக்கு தலை வணங்கவும் கூட வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். இங்கே பாருங்கள். நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. 40. ஓ, என்னே. இதோ பாருங்கள், தெய்வீக சுகமளித்தலைக் குறித்து அதோ அங்கே வெளியே ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. அங்கே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த ஒரு வாக்குத்தத்தமும் உள்ளது. நீங்கள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கிறிஸ்தவ விஞ்ஞானம், மேலும் மற்ற எல்லாவற்னூடாகவும் பாதையை ஏற்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் போய் அதைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தால், அது அங்கே வெளியில் உங்களுக்காகத்தான் உள்ளது; தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணி, அதை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஆமென். “பார், நான் அதை உனக்குக் கொடுப்பேன், அந்தத் தேசம் அங்கே உள்ளது. ஆனால் நீங்கள் அங்கு போய்ச் சேரும் முன்பு, நீங்கள் சண்டையிட்டாக வேண்டும்." இன்று ஜனங்களோடுள்ள காரியம் அது தான், அவர்கள் நின்று சண்டையிட பயப்படுகிறார்கள். நமக்கு என்ன தேவை என்றால்.... நான் அரசாள வேண்டுமானால், சண்டையிட்டாக வேண்டும், என் தைரியத்தை அதிகரியும், கர்த்தாவே. பரிசைப் பெற்றிட மற்றவர் கடும்போரிட்டு, இரத்தக் கடல்களின் வழியாக பயணம் செய்திருக்கும்போது, ஓர் இலகுவான பூப்படுக்கையின் மேல், நான் பரலோக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட இல்லை, நான் அரசாள வேண்டுமானால், நான் சண்டையிட்டே ஆக வேண்டும். (அது சரியே) 41. ஓ, நாம் மிகவும் முதுகெலும்பில்லாதவர்களாகவும், புழுக்களைப் போன்று எலும்பு இல்லாதவர்களாவும், பலவீனம் உள்ளவர்களாகவும், தைரியம் இல்லாதவர்களாகவும் இருக்கிறோம். பழங்கால பட்டி ராபின்சனைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவர் அந்த சோளவயலுக்கு இறங்கி சென்று, "கர்த்தாவே, நீர் எனக்குப் பரிசுத்தாவியைக் கொடுக்காவிட்டால், நீர் பூமிக்குத் திரும்பி வரும்போது, இங்கே ஒரு எலும்புக் குவியல் கிடப்பதைத் தான் கண்டுபிடிக்கப் போகிறீர்" என்றாராம். நாம் எப்பொழுதாவது அப்படிப்பட்ட உத்தமத்தைப் பெற்று இருப்போமானால், ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. அவர், கர்த்தாவே, என்னுடைய ஆத்துமாவின் இறுதி முனையில் (gable end) ஏராளமான அறிவை எனக்குத் தாரும். என்னுடைய வாயில் எனக்கு ஒரு பல்லாவது இருக்கும் வரையில், நான் பிசாசோடு சண்டையிடட்டும், அதற்குப் பிறகும், நான் மரிக்கும் வரைக்குமாக அவனை பல்லீறுகளைக் கொண்டாவது கடித்துக் கொண்டிருக்கட்டும் (gum)" என்று கூறினார். அதைத் தான் அவர் செய்தார். தைரியம் உடையவர்களாக இருந்து, அங்கே தொடர்ந்து எதிர்த்து நிற்கும்படியாக, தேவன் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வாராக. தேவன் அதை அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார், மற்றவர்கள் அதைப் பெற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். நாமும் போய் அதைப் பெற்றுக் கொள்வோம். அது நம்முடையதாக இருக்கிறது. தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? "ஆனால் இதோ பாருங்கள், என்னுடைய சபை என்ன கூறும்? என்னுடைய மேய்ப்பர் என்ன சொல்லுவாரோ? இது என்ன சொல்லுமோ? என்னுடைய அம்மா என்ன சொல்லுவார்களோ? இது என்ன சொல்லுமோ?” அவர்கள் என்ன கூறினாலும் அதை முக்கியமாக்க வேண்டாம். 42. தேவன், அந்தக் காரியத்தை முற்றிலும் சங்காரம் பண்ண க்கடவாய் (Utterly destroy)" என்று கூறினார். ஆமென். அல்லேலூயா. நமக்கு இன்று என்ன தேவையாயிருக்கிறது என்றால்..... நீங்கள் அழித்துப் போட வேண்டிய நிறைய காரியங்களோடு, நீங்கள் சுற்றிலும் ஒரு குழந்தையாகவோ, பெண்தன்மை கொண்ட சிறுவனாகவோ தான் இருக்கிறீர்கள். "நல்லது, நான் சுகமளித்தலைக் குறித்து சாட்சி கூற பயப்படுகிறேன், ஏனென்றால் அம்மா என்னைக் கீழே போட்டு விடுவார்கள், மேய்ப்பர், 'நல்லது, இப்பொழுது, அவன் இங்கே சுற்றிலும் அந்தக் காரியங்களைத் துவங்கப் போவதாக இருந்தால், நாம் அவனை சபையை விட்டு வெளியே தள்ளி விடுவோம்' என்று கூறிவிடுவாரே. தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? "அந்தக் காரியத்தை அழித்துப் போடு.” அதை உங்கள் சிந்தையை விட்டு வெளியே அகற்றிப் போட்டு விடுங்கள். அதை உங்கள் பாதையை விட்டு வெளியே நீக்கி விடுங்கள். ஆமென். நான் உணர்ச்சி வசப்பட்டதாக நினைக்க வேண்டாம். நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அறிவேன். பாருங்கள், நான் அப்படியே நன்றாக உணருகிறேன். சரி. 43. என்னுடைய சகோதரனே, நான் உன்னிடம் இதைக் கூறட்டும், நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். எனக்கு அனுபவம் இருக்கிறது. நிறைய ஜனங்கள் சுற்றிலும் புலம்பியவாறு, நல்லது, நான் சற்றே ஒருவித குழந்தையாக இருந்தால், ஏன், அண்டை வீட்டார் ஒருவிதத்தில்..." (என்கிறார்கள்.) "நல்லது, பாவம் திருமதி. இன்னார் இன்னார். அவள் சுகமளிக்கும் ஆராதனையில் இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவள் இன்னுமாக.... என்று அறிவேன். ஆமாம், பெருமாட்டியே.” ஓ, அந்தக் காரியத்தை சங்கரித்து விடுங்கள். நிறைய பேர்... அந்தச் சிறு எபூசிய குழந்தையைத் தூக்கி, "இவன் மிகவும் அழகாயிருக்கிறான். இவன் பல்லைக் காட்டிச் சிரிக்கிறான், மிகவும் பொடியன் நான் - நான்.... மிகவும் இனிமையாக இருக்கிறான். இவன் - இவன் ஒரு சிறு ஈவிய குழந்தையாக (Hivite baby) இருக்கிறான். நான் உங்களுக்குக் கூறுகிறேன்.” என்று கூறலாம். அந்தப் பிள்ளையை அழித்துப் போட வேண்டும் என்றும், அவனைச் செல்லமாக கொஞ்சிச் சீராட்டக்கூடாதென்றும், அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் வேதாகமம் கூறியுள்ளது. அவன் வளர்ந்து தன்னுடைய அப்பாவைப் போன்றே இருப்பான். 44. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, உங்களுடைய அண்டை வீட்டாருக்கு சுகமளித்தலில் விசுவாசம் இல்லாத காரணத்தினாலும், உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்காத காரணத்தினாலும், நீங்கள் சுற்றிலும் உங்கள் வியாதியை செல்லமாக நடத்தும்படியாவும், சுற்றிலும் உங்களுடைய சிறிய அற்பமான காரியங்களையும் அவ்விதமான காரியங்களையும் கொஞ்சி சீராட்டிக் கொண்டிருக்கும் படியாகவும் போகலாம். அந்தக் காரியத்தை அழித்துப் போடுங்கள். நாம் அங்கு சென்று, அத்தேசத்தை எடுத்துக் கொள்வோம். அல்லேலூயா. அது நம்முடையது என்று தேவன் சொல்லியிருக்கிறார். "வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைக ளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” ஆமென். இன்றிரவு சபையோடுள்ள காரியம் அதுவாகத்தான் இருக்கிறது: நாம் முதுகெலும்பிற்குப் பதிலாக கோழியின் மார்பெலும்பைப் பெற்றிருக்கிறோம். நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், உங்களை எழுந்து நிற்கப் பண்ணுகிற ஏதோவொன்று தான் அங்கே உள்ளே தேவையாயிருக்கிறது. 45. எப்பொழுதாவது அற்பமாக எண்ணப்பட்ட (அசட்டை செய்யப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தான் பெற்றுக் கொண்டதற்காக அவன் சண்டையிட வேண்டியிருந்தது. தேவன் ஒரு வெள்ளித் தட்டின் மேல் வைத்து அதை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அவர், அதோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் இருக்கிறது. அதில் பாலும் மற்றும் தேனும் ஓடுகிறது. ஆனால் நீங்கள் அங்கு போவதற்கு முன்பு, நீங்கள் இந்த எல்லா ஏவியர்களினூடாகவும், கானானியர்களினூடாகவும், மற்றும் எல்லாவற்றினூடாகவும் போகப் போகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களில் ஒருவரிடமும் தலை வணங்க வேண்டாம். நீங்கள் அவர்களிடம் வருகையில் அந்தக் காரியங்களை அழித்துப் போடுங்கள். சத்துருக்களின் பலிபீடத்தின் மேல் நெருப்பை பற்ற வைப்பதை (building a fire) நிறுத்துங்கள்” என்றார். ஆமென். நான் சரியாக இப்பொழுதே என்னுடைய அளவைப் போல இரண்டு மடங்காக இருக்க விரும்பினேன், ஒருக்கால் இரு மடங்கு நன்றாக உணர்ந்திருப்பேன். சகோதரனே, நான் உன்னிடம் கூறட்டும், நான் ஏறக்குறைய அதை உணரும்படியாக இருக்க வேண்டியிருக்கிறது. கவனியுங்கள். 46. அது சரியே. நாம் முற்றிலுமாக சங்கரித்துப் போடவே விரும்புகிறோம். அங்கே தெய்வீக சுகமளித்தல் இருக்கிறது. ஆனால் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, செல்வி ஜோன்ஸ் அதை நம்ப மாட்டாள்." நல்லது, அப்படியானால் செல்வி ஜோன்ஸை ஒருபுறமாக வைத்துவிடுங்கள். "மேய்ப்பருக்கு அதில் நம்பிக்கை கிடையாது." அப்படியானால் உங்கள் மேய்ப்பரை ஒரு புறமாக வைத்துவிடுங்கள். அது சரியே. அந்தக் காரியங்களை அழித்துப் போடுங்கள். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று மருத்துவர் கூறுகிறார்.” மருத்துவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. விசுவாசிக்கிற பிரசங்கிமார்களை நான் கண்டு பிடிக்க முடிவதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக விசுவாசிக்கிற மருத்துவர்களை நான் காண்கிறேன். அது சரியே. இன்னும் அதிகமான மருத்துவர்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சில அரைகுறை வைத்தியர்களையும் பெற்றிருக்கிறார்கள். நாமும் இரு பக்கங்களிலும் அவர்களைப் பெற்றிருக்கிறோம். அது உண்மை . ஆனால் நான் உங்களிடம் கூறட்டும், சர்வவல்லமையுள்ள தேவனால் சகலத்தையும் செய்ய முடியும் என்று விசுவாசிக்காத, பிரசங்கியாரோ, அல்லது மருத்துவரோ, அல்லது அது யாராக இருந்தாலும், அதைப் புறக்கணித்து விடுங்கள். தேவன் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார். நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நாம் தேவனுடைய சத்தியத்தை விசுவாசிக்கி றோம், நாம் நிச்சயமாக தேவனுடைய சத்தியத்திற்காக நின்றாக வேண்டும், நாம் கட்டாயம் தேவனுடைய சத்தியத்தில் ஜீவிக்க வேண்டும். தேவன் நமக்குக் கொடுக்கிற, ஒவ்வொரு வாக்குத் தத்தமும் நம்முடையதாக இருக்கிறது. நாம் போய் அதைப் பெற்றுக் கொள்வோம். ஆமென். வியூ. அவர்களில் சிலர், "நல்லது இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா, நீண்ட காலத்திற்கு முன்பே, அம்மா இந்தச் சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள் என்று கூறலாம். அந்தக் காரியத்தை விலக்கித் தள்ளி விடுங்கள். அது அதற்காக தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்தக் காரியத்தை சிலுவையில் அறைந்து விடுங்கள். பலிபீடத்தை தலை கீழாகப் புரட்டிப் போட்டு விட்டு, தேவனைத் தொழுது கொள்ளுங்கள். 47. அது ஒரு காரியம் அல்ல... ஓ, நாம், "அது மிகவும் அழகாயிருக்கிறது. அவர்கள் அப்படிப்பட்ட பெரிய அருமையான காரியத்தைப் பெற்றிருக்கிறார்கள்..." என்று கூறலாம். அவர்கள் எதைப் பெற்றிருந்தாலும், எனக்குக் கவலையில்லை. அது தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப் போகவில்லை என்றால், அந்தக் காரியத்தை விட்டு விடுங்கள். நாம் ஒரு பாதையில் இருக்கிறோம். அல்லேலூயா. மகிமை. பரிசுத்தாவியானவர் தொடர்ந்து அசைவாடிக் கொண்டு இருக்கிறார்; அடையாங்களும் அற்புதங்களும், செய்து காட்டப் படுதலும், தேவனுடைய வல்லமைகளும், சுகமளித்தல்களும் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியூ. அது எனக்காக இருக்கிறது. அதைத் தான் நான் விரும்புகிறேன். ஆமென். 48. "குமாரன் விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாய் இருக்கிறீர்கள்.” ஆமென். அடிமைத்தனமும் இல்லை, இல்லை... அடிமைத்தளை அகற்றப்பட்ட விடுதலை, அங்கே தான் கிறிஸ்து உங்களை விடுதலையாக்கி விட்டார்." அது சரியே. அந்தச் சிறிய ஈவியரை வெளியே அழித்துப்போடுங்கள். சிறிய எபூசியனையும்.... அந்தச் சிறிய கானானியனை எடுத்து, அவனை உதைத்து தூர எறியுங்கள். அவனை உயிரோடு விடாதீர்கள். அவனைக் கொன்று போடுங்கள். அவனைக் கொல்லும்படி தேவன் சொல்லியிருக்கிறார். அவனை அழித்துப் போடுங்கள். வெறுமனே, "என்னுடைய அன்பான சிறிய நண்பனே, இந்த எழுப்புதல் முடிந்த உடனே, நான் மீண்டுமாக உன்னைக் காணும்படி திரும்ப வருவேன் என்று (கூறுவது) அல்ல. ஓ, என்னே . ஒரு போதும் அதைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்களானால், நீங்கள் ஒரு போதும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் போகவே போக மாட்டீர்கள். சகோதரனே, தேவனுடைய பட்டயத்தை வெளியே எடுத்து, சண்டையிடச் செல்லுங்கள். வியூ. நான் அதன் பேரில் தரித்திருக்கும்படியாக, நீண்ட நேரம் எனக்கு இருக்க விருப்பம் தான். அங்கே மேலே வந்து கொண்டிருக்கிற இன்னும் கொஞ்சம் அதிகமான சிந்தனைகள் என்னிடம் இருக்கின்றன, ஆனால் அவர் அவர்களை அந்த தேசத்திற்குள் கொண்டு சென்ற இடமாகிய இங்கே வர விரும்புகிறேன். ஆமென். 49. நாம் சற்று அதிகத் தூரமாக வாசிப்போம். அவைகளைப் பணிந்து கொள்ள வேண்டாம். அவைகளைச் செவிக்கவும் வேண்டாம். அவைகளுடைய சிலைகளை அழித்துப் போடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன் நடுவிலிருந்து விலக்குவேன் (அல்லேலூயா) தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார். அம்மாதிரியான பிரயாணத்தில், தேவன் அவ்வாறு கூறியிருந்தால், அவர் - அவர் உண்மையான பிரயாணத்தில் எவ்வளவு அதிகமாக சொல்லுவார்? ஒரு வெண்கல சர்ப்பமானது வியாதியை நடுவிலிருந்து விலக்கிப் போட்டிருக்குமானால், இயேசு கிறிஸ்து என்ன செய்வார்? இயேசு, “அதே காரணம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள் (compound reason)) மோசே வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினான், அவ்வண்ணமே மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்று இயேசு கூறியிருக்கிறார். அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் பாவம் செய்து, அவர்கள் அதைச் செய்த காரணத்தினால் அவர்கள் வியாதிப்பட்டிருந்தார்கள். வியாதியை விலக்குதலாகிய முன்னடையாளம், அதற்கான நேர் எதிர் அடையாளம் (antitype) என்னவாக இருக்கும்? ஒரு வெண்கல சர்ப்பம் அதைச் செய்திருக்குமானால், இயேசு கிறிஸ்து எதைச் செய்வார்? அவர், "மனுஷகுமாரன்... மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினது போல, மனுஷகுமாரனும் நிச்சயமாக உயர்த்தப்பட வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். 50. இப்பொழுது, "நான் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்.” ஓ, என்னே. அதெல்லாம் சரிதான், அப்பமும் தண்ணீரும். பையனே, அது நம்முடைய அமெரிக்க கௌரவத்தை நிச்சயமாக பாதித்திருக்கும் (hurt our American prestige), அது அவ்வாறு பாதித்திருக்காதா? அது நிச்சயமாக பாதித்திருக்கும். நீங்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் கீழான நிலையில் இருந்திருந்தால். இன்று பின்லாந்து தேசத்து சகோதரி ஒருவர் ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவள் பின்லாந்து தேசத்திலிருந்து வரும் கடிதங்களை எங்களுக்காக மொழி பெயர்த்து தரும்படியாக இங்கே, சிகாகோவில் வேலை செய்கிறாள். அவள் சொன்னாள்... ஒரு சிறிய பாடல் பின்லாந்து தேசத்தில் ஒரு மனிதன், கொஞ்சம் உப்போடும், கொஞ்சம் ரொட்டியோடும் (அப்பத்தோடும்) கூட இறங்கி வந்ததாக அவள் கூறினாள், அவன்.... மேலும் அவன் குடிப்பதற்கு குதிரைகள் குடிக்கும் தண்ணீர்த் தொட்டியும் (horse trough) அவனுக்குக் கிடைத்ததாம். அப்போது அவன் தன்னுடைய கண்களை மேலே ஏறெடுத்துப் பார்த்து, அந்த அப்பத்திற்காகவும், உப்பிற்காகவும், குடிப்பதற்குக் கிடைத்த குதிரைகள் குடிக்கும் தண்ணீர் தொட்டிக்காகவும் (horse trough) தேவனுக்கு நன்றி செலுத்தினான். ஜனங்களைப் போஷிக்கும்படியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலிலும் நாம் குப்பைத் தொட்டியிலிருந்து (garbage can) போதுமான ஆகாரத்தைப் பெருக்கி வாரலாம் (rake out). ஓ, நாம் உண்மையாகவே.... நான் நினைக்கிறேன்... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்... ஏறக்குறைய அதைப்போன்று, எபிரெய பிள்ளைகள் கீழே அக்கினிச்சூளையில் இருந்தது போன்று, அல்லது, அவர்கள் முதலாவது பாபிலோனுக்குப் போன போது நடந்ததைப் போன்று. உங்களுக்குத் தெரியும், தேவன் நோக்கிப்பார்த்தார் - அவர் கீழே நோக்கிப் பார்த்து, அவர் நம்பிக்கை வைக்க முடிந்த தானியேல் என்ற பெயருடைய ஒரு மனிதன் அவருக்கு இருந்தான் என்பதை அவர் கண்டார். அவருக்கு இன்னும் கூடுதலாக சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களும் இருந்தார்கள். எனவே அவரால் அவர்களை நம்ப முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்நிலையில் அவர் - (செய்யக் கூடாதென்று அவர்களிடம் சொல்லியிருந்தார். எப்படி என்ன- அவர்கள் அங்கே இருக்கை யில், அவர்கள் கட்டாயம் நியாயப்பிரமாணத்தின்படி நடந்தாக வேண்டும். 51. இராஜாவின் உணவு போஜனத்தினால் தன்னை தீட்டுப் படுத்தலாகாது என்று தானியேல் தன்னுடைய இருதயத்தில் தீர்மானித்துக் கொண்டான். அது அப்படியே சரியாக.... நீங்கள் எதையாவது செய்யப் போவதாகவோ, உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்ளப் போவதாகவோ, அல்லது உங்களுடைய பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதாகவோ கூறுவீர்களானால், அப்போதுதான் பிசாசு எல்லா நான்கு கால்களைக் கொண்டும் உங்கள் மேல் பறந்து வருவான். அது சரியே. அவன் அங்கே போனபோது, அவன் என்ன செய்யப் போவதாக இருந்தான் என்பதை கூறினான். அந்த இராஜா பார்க்கும்படி வந்து, தானியேலுக்குள் ஒரு மேன்மையான ஆவி இருந்ததைக் கண்டான். எனவே அவன், "இப்பொழுது, நீங்கள் அந்த மனிதர்களை அங்கு வைத்து, அவர்களைப் போஷித்து வாருங்கள்” என்று கூறினான். 52. மருத்துவரும் கூடவே வந்து, "இதோ பாரும். அவர்களுக்கு நிறைய வைட்டமின்கள் தேவைப்படுகிறது, எனவே நான் உமக்குச் சொல்லுகிறேன், நீர் அவர்களுக்கு கொஞ்சம் ஒயினும், கொஞ்சம் மதுபானமும், ஏராளமான கலோரிகள் நிறைந்த கொஞ்சம் கொழுப்பு வகைகளும், நிறைய மாமிசமும், மேலும் நிறைய காரியங்களையும் நீர் கொடுக்க வேண்டும்” என்று கூறுவதை நான் ஊகித்துப் பார்க்கிறேன். அதற்கு இராஜா, "நான் என்னுடைய சொந்த விருந்து மேஜையிலிருந்தே அவர்களைப் போஷிக்கிறேன்” என்றான். ஆனால் அது பழங்கால தானியேலிடம் வந்த போது, (ஆமென்), கர்த்தரை நேசித்த யாரோ ஒருவரை அவர்கள் அங்கே சந்தித்தார்கள். 53. அதை செவி கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களிடத்தில் வந்த அந்த ஆள், "இப்பொழுது, இதோ பாருங்கள், இராஜா அனுப்பிய ஒரு உணவு வகை இதோ இருக்கிறது. இது எவ்வாறு தோன்றுகிறது என்று பாருங்கள் என்றான். மகத்தான பெரிய ஆண் வான்கோழியும், முழுவதும் நிரம்பிய விஸ்கியும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது. "இப்பொழுது, நீங்கள் சந்தோஷமாக இருக்க இராஜா விரும்புகிறார், எனவே இப்பொழுது இதில் சிலவற்றை அவர் உங்களுக்குக் கொடுக்கப் போகிறார், உங்களை தொடர்ச்சியாக ஊக்கமூட்டி வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். அதற்கு அவன், "நான் - நான் அதைக் குடிக்க மாட்டேன்” என்றான். “ஓ," அவன், "நான் என்னுடைய ஜீவனுக்காகவும் உங்களுடைய உயிருக்காகவும் பயப்படுகிறேன் என்றான். "நீர் செய்ய வேண்டியது இன்னதென்று நான் உமக்குக் கூறுகிறேன், நீர் எனக்கு பத்து நாட்கள் வெறும் புசிக்கக்கூடிய விதை வகைகளைத் (pulse) தாரும், பின்பு என்னைச் சோதித்துப் பாரும்" என்றான். ஆமென். வேறு வகையாகச் சொன்னால், கொஞ்சம்...?... பயறையும், கொஞ்சம் சோள அப்பத்தையோ, அல்லது அதை நீங்கள் எவ்வாறு அழைக்க விரும்பினாலும் அதையோ எனக்குத் தாரும். நீர் அதில் கொஞ்சமானதை பத்து நாட்களுக்கு எனக்குத் தந்து பார்த்து, மற்றவர்களோடு என்னைச் சோதித்துப் பாரும்” என்றான். 54. சகோதரனே, எனக்கு நிறைய இருந்து, தேவனுடைய இராஜ்யத்தை விட்டுத்தூரமாய் இருப்பதைக் காட்டிலும், எனக்குக் கொஞ்சமே இருந்து, நான் தேவனுடைய இராஜ்யத்தில் இருந்து, நான் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதையே அதிகம் விரும்புகிறேன். நான் சிகாகோவிலேயே மிகப்பெரிய சபையில் அங்கத்தினனாய் இருந்து, தேவனுடைய இராஜ்யத்திற்குப் புறம்பாக இருப்பதைக் காட்டிலும் ஒரு கூட்டம் கொஞ்சமான பரிசுத்த உருளையர்க ளோடு என்னுடைய வழியைத் தெரிந்து கொண்டு, தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிப்பதையே அதிகம் விரும்புவேன். ஆமென். 55. எப்படியும் இன்றிரவு என்னோடுள்ள காரியம் தான் என்ன? என்னுடைய சகோதரனே, நான் உன்னிடம் கூறட்டும், நமக்கு இன்று என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு நல்ல பழங்கால பரிசுத்த பவுலுடைய எழுப்புதலும், வேதாகமமும், பரிசுத்தாவியானவர் மறுபடியுமாக சபையில் திரும்பி வருவதும் தான். ஆமென். அவர்கள் இந்த ஆகாரத்தை பத்து நாட்களுக்கு அவனுக்கு உண்ணக்கொடுத்தார்கள், பாத்திரத்தில் கொஞ்சம் பட்டாணியும், அல்லது எப்பொழுதாவது அது என்னவாக இருந்ததோ அதை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்கள். உங்களை கொழுக்க வைக்க அதில் எதுவுமேயில்லை. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் தானியேலையும் மற்றவர்களையும் மேலே கொண்டு வந்து, அவர்கள் எல்லா வாலிபர்களையும் சோதித்துப் பார்த்தார்கள். அவர்கள் சகோதரன் தானியேலை மேலே கொண்டு வந்த போது, என்னே, அவனுடைய கன்னங்கள் சிவப்பு ரோஜா பூ போன்று முழு ஆரோக்கியத்தோடு பிரகாசமாக இருந்தது (rosy). அவனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு உருண்டு பருத்து சதைப் பற்றுள்ளவனாக இருந்தான். அல்லேலூயா. பதில் சொல்லு” என்றான். அவர்கள் தானியேலுக்கு முன்பாக அந்தச் சிறு பாத்திரத்தில் பட்டாணியை வைக்கும் ஒவ்வொரு முறையும், தேவன் வந்து, வைட்டமின் பாட்டிலை எடுத்து, முழு காரியத்தையும் அவைகளுக்குள் ஊற்றினார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அல்லேலூயா. 56. நீங்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்து, பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானத்திற்கு பின்னாக பின்தொடர்ந்து சென்று, தேவனைச் சேவிக்கும்படியாக தேடுவீர்களானால், அவர் இன்னுமாக இன்றிரவும் அவைகளை மகிமையில் வைத்திருக்கிறார். ஆமென். ஓ, நான் நன்றாக உணருகிறேன். பார், சகோதரனே. தேவன் ஏதோவொரு விதமான ஒரு வைட்டமினைக் கொண்டு தானியேலைப் போஷித்தார். ஆனால் அவன் எவ்வளவு கூடுமோ அவ்வளவு திடகாத்திரமாகவும் (round), கொழு கொழுவென்றும் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அவர்களில் ஒருவன், "இதற்குப் பதில் சொல்லு, அந்த ஆசாமிக்கு சாப்பிட அதிகம் இல்லையே. நான் ஒவ்வொரு காலையிலும் அவனுக்கு சோள அப்பம் தான் கொடுக்கிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவனிடம் இருந்தது எல்லாமே அவ்வளவு தான். ஆனால் தேவனோ இங்கே, "நான் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்” என்று சொன்னார். நான் பிசாசுக்காக வாழ்ந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் வறுத்த கோழியும், ஐஸ்கிரீமும் கொண்டிருப்பதைக் காட்டிலும், தேவனுக்காக வாழ்ந்து, அப்பத்தையும் தண்ணீரையும் கொண்டு இருப்பதையே அதிகம் விரும்புவேன், நீங்களும் அவ்வாறு விரும்பமாட்டீர்களா? நிச்சயமாக. ஆம், ஐயா. 57. தானியேல், அவன் எவ்வளவு இருக்கக் கூடுமோ அவ்வளவு கொழு கொழுவென்றும், திடகாத்திரமாகவும் (fat and round) இருந்தான், உங்களுக்குத் தெரியும், அவனுடைய கன்னங்கள் ரோஜா நிறத்தில் பிரகாசமாகவும் இருந்தது. அவன் அங்கே மேலே நடந்து வந்து, "ஆம், ஐயா. கனம் பொருந்திய ஐயா. இதோ நான் இருக்கிறேன்” என்றான். அவனை சோதித்துப் பார்த்து விட்டு, "என்னே, ஒவ்வொரு காலையிலும் சோள ரொட்டியைச் சாப்பிட்டே, ஏறக்குறைய இவனுடைய வஸ்திரங்களுக்கு முழுக்க வளர்ந்து விட்டானே” என்றான். என்னே, தேவன் எப்படியாக ஆசீர்வதிப்பார். கவனி, சகோதரனே, இந்த உலகத்தின் பெரிய காரியங்களுக் காக ஆசைப்படாதே, ஆனால் தேவன் உனக்கு என்ன கொடுத்து இருக்கிறாரோ, அதைக் கொண்டு திருப்தியாயிரு உனக்கு இருக்க வேண்டிய ஒரே காரியம், நீ தேவனுடைய சித்தத்தில் தான் இருக்கிறாய் என்ற நிச்சயத்தைக் கொண்டு இரு. நான் மற்ற மூன்று பேரையும் காண்கிறேன். ஒரு சமயம் அவர்களுடைய சோதனை எவ்வாறு வந்தது என்று நாம் காண்போம். இவர்கள் இராஜாவின் மதுபானத்தைக் குடிக்காத காரணத்தினாலும், அவனுடைய சிலையைப் பணிந்து கொள்ளாத காரணத்தினாலும், ஒரு காலையில் அவர்கள் இவர்களை அக்கினியால் சுட்டெரிக்கப் போவதாக இருந்தார்கள். 58. நாம் ஒரு சில நிமிடங்களுக்கு சற்றே அதை நோக்கிப் பார்ப்போம். நான் அதை பாபிலோனில் காண்கிறேன். அது பகல் நேரத்தில் மேலே வந்து கொண்டிருக்கிறது. வயதான இராஜா, "இந்தச் சிலையைப் பணிந்து கொள்ளாத எவனும் சிகாகோவில் உள்ள சுவிசேஷ கூடாரத்தில் இருக்கும் உஷ்ணத்தைக் காட்டிலும், மிக உஷ்ணமாக சூடாக்கப்பட்ட அக்கினிச்சூளையில் போடப்படுவான்” என்று சொல்லியிருந்தான். சரி. "அந்தச் சிலையைப் பணிந்து கொள்ளாதவனுக்கு, அது எப்பொழுதும் சூடாக்கப்படுவதைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிக உஷ்ணமாக இருக்கிறது என்று அவன் கூறினான். நல்லது, இந்த வாலிபர்களோ அதன் பேரில் தங்கள் முதுகைத் திருப்பினார்கள். "சரி,” அவன், "நான் அவர்களை அந்த அக்கினிச் சூளையில் போடப் போகிறேன்” என்றான். என்னால் அந்தக் காலையில் கீழே பாபிலோனில் பார்க்க முடிகிறது. ஆமென். என்னால் பார்க்க முடிகிறது, முழு வானமும் சிவந்த நிறத்தில் இருப்பதை என்னால் காண முடிகிறது. நேபுகாத்நேச்சார் இராஜா அங்கே வெளியே ஒரு ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறான், அது இருந்த வண்ணமாக, தன்னுடைய கால்களைக் குறுக்காக வைத்தபடி இருக்கிறான், அது உங்களுக்குத் தெரியும். அந்த பரிசுத்த உருளையர்களை வெளியே கொண்டு வாருங்கள். நாம் அந்த மார்க்கத்தை அவர்களை விட்டு அக்கினியால் முழுவது மாக சுட்டெரித்து அழிக்கப்போகிறோம்” என்று கூறினான். 59. சகோதரனே, அக்கினியோடு அக்கினியை உன்னால் சண்டையிட வைக்க முடியாது. பரிசுத்த ஆவி தாமே அக்கினியாக இருக்கிறது. அது சரியே. அவர்களை வெளியே கொண்டு வந்து, நாம் அந்த மார்க்கத்தை அவர்களை விட்டு முழுவதுமாக சுட்டெரித்து அழித்துப் போடுவோம். நாம் அவர்களைப் பணிந்து கொள்ள வைப்போம்" என்றான். சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ அங்கே மேலே அந்த நகரக் கூடிய மரப் பலகையில் நடந்து வரத் தொடங்குவதை என்னால் கேட்க முடிகிறது, அவர்கள் அந்த சூளைக்குள் போடப்படப் போகிறார்கள். சாத்ராக், "சகோதரன் ஆபேத்நேகோ?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. "ஆம், சாத்ராக்” "நீ முழுவதும் ஜெபித்து விட்டாய் என்ற நிச்சயம் உனக்கு உள்ளதா? ஆம். அதெல்லாம் சரியாகவே இருக்கிறது என்று நான் நிச்சயம் உடையவனாயிருக்கிறேன். ஆமாம், ஜெயம் பெற்றாகிவிட்டது. சரி. "ஏய், நீ அதிலிருந்து பின்வாங்க விரும்புகிறாயா?" என்று கேட்டான். அதற்கு இவன், "எங்கள் தேவன் எங்களை இந்த அக்கினிச் சூளையிலிருந்து தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். எனினும், அவர் தப்புவிக்காமல் போனாலும், நாங்கள் உம்முடைய சிலையைப் பணிந்து கொள்ள மாட்டோம்” என்றார்கள். ஆமென். அல்லேலூயா. நான் உமது சிலையைப் பணிந்து கொள்ள மாட்டேன்.” அவர்கள் ஒரு சில அடி தூரம் நடந்து சென்றார்கள். என்னே, தேவன் அதைக் குறித்து கவலைப்படாதது போன்று தோன்றினது. 60. ஈட்டிகளை வைத்திருந்த அந்த மனிதர்களை என்னால் காண முடிகிறது, கடுமையான வெப்பமானது ஏறக்குறைய அவர்களைப் பிடித்துக் கொள்வதாக இருந்தது, அவர்கள் ஏறக்குறைய மூச்சுத் திணறினதாக இருந்தார்கள். சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ, ஒருவிதத்தில் மயக்கம் போட்டு சாய்ந்து (விழுவது) போன்று, மேலே நடந்து போய்க் கொண்டு இருந்தார்கள், கைகள் அவர்களுக்குப் பின்னால் கட்டப்பட்டு இருந்தது, அவர்கள் சரியாக அக்கினிச்சூளைக்குள் போய்க் கொண்டிருந்தார்கள், அவர்கள் பாதையின் கடைசி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.... இப்பொழுது அவர்களை என்னால் காண முடிகிறது, அங்கே அவர்கள் சற்று ஏறக்குறைய.... நாம் இதை சற்று நாடக பாணியில் கூறுவோம் (dramatize). அந்த அக்கினிச்சூளைக்குள் அவர்கள் போவதற்கு ஏறக்குறைய ஒரு காலடி தூரம் தான் இருக்கிறதான அந்த இடத்தில் அவர்களை என்னால் காண முடிகிறது. அவசரப்படுகிற ஒரே நபர் நீங்களும் நானும் தான். தேவன் தம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்கிறார். அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கும் காலம் வரையில், அதுவே நன்கு போதுமானதாக இருக்கிறது. சரி. அவர்கள் அங்கே சரியாக மேலே ஏறக்குறைய அந்த அக்கினிச்சூளையில் அடியெடுத்து வைக்க ஆயத்தமாக இருப்பதை என்னால் காண முடிகிறது, அங்கேயிருந்த விசுவாசிகளுக்காக, அது மிகவும் மோசமாகவே தோன்றினது. அதோ அந்த வயதான இராஜா உட்கார்ந்து, "நல்லது, இப்பொழுது இங்கே சுற்றிலுமுள்ள இந்த பரிசுத்த உருளையர்களை நாம் நிறுத்தி விடுவாம். இப்பொழுது, அதெல்லாம் - நமக்குக் கீழாக இருக்கிறது, இந்த சூழ்நிலை நம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அவர்கள் அந்த அக்கினிச்சூளையில் போடப்பட்ட உடனே, மற்றவர்கள் இதைக் கண்டு, இங்கே சுற்றிலும் நான் தான் முதலாளி (boss) என்பதை அறிந்து கொள்வார்கள்” என்றான். 61. ஆனால் சகோதரனே, சகலத்தையும் அறிந்தவராக, அதோ அங்கே மேலே பரலோகத்திலே வீற்றிருக்கிற வேறொரு முதலாளி (Boss) இருக்கிறாரே. நாம் இப்பொழுது நம்முடைய முகத்தை அவரை நோக்கித் திருப்பி, அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று காண்போம். எல்லா நேரமும், இங்கே கீழே ஏதாவது நடந்து கொண்டிருக்கும் போது, அங்கே மேலேயும் கூட ஏதோ நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அது உங்களுக்குத் தெரியுமா? நாம் பார்ப்போம். அவர் தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பதை என்னால் காணமுடிகிறது, அவருடைய மகத்தான நீளமான அங்கி அவரைச் சுற்றிலுமாக தொங்கிக் கொண்டிருக்கிறது. மேலே அவருடைய வலது பக்கத்திற்கு வந்து, நான் நோக்கிப் பார்க்கும் போது, இதோ ஒரு தூதன் வருகிறான். பரலோகத்தில் தூதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தன்னுடைய பட்டயத்தை உருவிக் கொண்டு, ஒரு பெரிய தூதன் அதோ வருகிறான்; அவனுடைய பெயர் தான் காபிரியேல் அவன் எஜமானருக்கு முன்பாக எழுந்து நின்று, தன்னுடைய தலையைத் தாழ்த்தி, எஜமானரே, நீர் எப்பொழுதாவது என்னை சிருஷ்டித்தது (created) முதற்கொண்டு நான் உமக்கு கீழ்ப்படிய முயன்று வருகிறேன். ஆனால் இந்தக் காலையில் அங்கே கீழே பாபிலோனில் நோக்கிப் பார்த்தீரா? முற்றிலும் உண்மையான அசலான விசுவாசிகளாகிய மூன்று பேர் அதோ கீழே நமக்கு இருக்கிறார்களே. அவர்கள் இவர்களை சுட்டெரித்து அழித்துப் போடப் போகிறார்கள். நான் அங்கே கீழே போகட்டும். நான் அந்தக் காட்சியையே மாற்றிப் போடுகிறேன் என்று கூறினான். அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. 62. அதற்கு எஜமானர், "காபிரியேலே, நீ உண்மையாக இருக்கிறாய். நீ ஒரு உண்மையான தூதனாக இருந்து வருகிறாய். நான் உன்னை சிருஷ்டித்தது முதற்கொண்டு, செய்யும்படி நான் உன்னிடம் கூறிய எல்லாவற்றையும் நீ செய்திருக்கிறாய். ஆனால் அந்தப் பட்டயத்தை உறையில் போடு. உன்னை என்னால் போக அனுமதிக்க முடியாது என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. உடனே காபிரியேல் தன்னுடைய பட்டயத்தை உறையில் போட்டு விட்டு, அவருடைய பக்கத்தில் அட்டென்சன் நிலையில் நேராக நின்று கொண்டான். இதோ வேறொரு தூதன் வருகிறான். அவனுடைய பெயர் என்ன? அது எட்டி (Wormwood) தானா? அவனுக்கு தண்ணீர்கள் எல்லாவற்றின் மேலும் அதிகாரம் இருந்தது. அவன் எஐமானருக்கு முன்பாக விழுந்து, அவன், "எஜமானரே, நீர் கீழே பாபிலோனில் பார்த்தீரா? அங்கே கீழே தேவனுடைய வார்த்தையை உண்மையாகப் பற்றி பிடித்துக் கொண்டிருக்கிற மூன்று விசுவாசிகளை, அவர்கள் இந்தக் காலையில் அக்கினியால் சுட்டெரித்து அழித்துவிடப் போகின்றனர். அவர்களை நோக்கிப்பாரும். ஏன், நான் உமக்குச் சொல்லுகிறேன், நான் ஜலப்பிரளய காலத்திற்கு முன்பிருந்த உலகத்தை அழிக்கும் படியான அதிகாரத்தை நீர் எனக்குக் கொடுத்தது போல, நான் போக நீர் அனுமதிப்பீரானால். நான் ஆழத்தின் எல்லா நீருற்றுகளையும் உடைத்து, முழு உலகத்தையுமே அழிக்கும் படிக்கு ஒரு பிரளயத்தை (வெள்ளப்பெருக்கை) அனுப்பி விடுகிறேன்” என்றான். 63. பரலோகத்திலுள்ள எட்டியை (Woodworm) உங்களுக்குத் தெரியும், அவனுக்கு தண்ணீர்களின் மேல் அதிகாரம் இருந்தது. அவன், "நான் இந்தக் காலையில் அங்கு கீழே போய், பாபிலோனையே பூமியின் மேற்பரப்பை விட்டு கழுவி அகற்றி விடுகிறேன்” என்றான். அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். நிச்சயமாக, அவனால் அதைச் செய்ய முடியும். அவரோ, "எட்டி, நீ ஒரு நல்ல தூதன். நான் எப்பொழுதாவது உன்னை சிருஷ்டித்தது முதற்கொண்டு நீ எனக்கு கீழ்ப்படிந்தே இருக்கிறாய். ஆனால் உன்னை போகவிட என்னால் முடியாது" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் அதற்கு அவன், "கர்த்தாவே, நீர் அதை யோசித்துப் பார்க்கவில்லையா?” என்று கேட்டான். "ஆமாம். நான் அவர்களை இரவு முழுவதும் கவனித்து வருகிறேன்." ஆமென். அவருடைய கண் சிட்டுக்குருவியின் மேலும் இருக்கிறது, அவர் என்னை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஆமென். ஆம். "நான் முழு இரவும் அவனைக் கவனித்து வருகிறேன். சென்ற இரவு அந்த ஜெபக்கூட்டத்தில் அவர்களுடைய (ஜெபத்தைக் கேட்டேன். அவர்கள் ஜெபத்தினூடாக இருந்தபோதே அவர்களைக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன், அவர்கள் தங்கள் ஜெபங்களால் இங்கே பரலோகத்தையே தட்டிக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் போவதற்கு இன்னும் ஒரு அடி இருந்த போதே எனக்குத் தெரியும். நான் முழு இரவும் அவர்களைக் கவனித்துக் கொண்டு வந்தேன். உன்னை போகும்படி என்னால் அனுமதிக்க முடியாது, ஏனென்றால் அது ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. நானே போகிறேன்” என்று (கூறினார்.) ஆமென். அல்லேலூயா. 64. அவர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து எழுவதை என்னால் காண முடிகிறது. அவருடைய ஆசாரிய வஸ்திரம் அவரைச் சுற்றிலும் இருந்தது, அவர் இங்கே தம்முடைய பெரிய சிங்காசனத்தின் ஓரத்திற்கு நடந்து வந்து, இங்கே வெளியே நடந்து வர, அங்கே ஒரு பெரிய வெண்மையான திரள் கார்முகில் மேகம் நின்றுகொண்டிருக்கிறது. அவர், "கிழக்கு காற்றே, மேற்கு காற்றே, வடக்கு மற்றும் தெற்கு காற்றுகளே" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆமென். எல்லாமே அவருக்குக் கீழ்ப்படிகின்றன. அதோ அங்கிருக்கிற அந்த திரள்கார்முகில் மேகத்தின் கீழாக போய், இங்கே என்னுடைய சிங்காசத்தின் பக்கத்தில் நெருங்கி வாருங்கள் என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அந்தக் காற்றுகள் அந்த திரள்கார்முகில் மேகத்தின் (thunderhead) கீழாக வருவதை என்னால் காண முடிகிறது. பெரிய மேகம்.... சத்துருவின் மீது போர் தொடுக்க ஈடுபடுத்துவதற்கான போராளிகளாக (warring) சிங்காசத்திற்கு முன்பாக வருகின்றன. அவர் அங்கே அதன் மேல் அடியெடுத்து வைத்து, மேலே எட்டி, வளைந்து வளைந்து செல்லும் மின்னலைக் (zig-zag lightning) கரங்களால் பற்றிப் பிடித்து, அதை சாட்டையால் அடிக்கிறார் (cracks). அந்தக் காற்றுகள் குதிரைகளைப் போன்று இருக்கின்றன. சகோதரனே, அவர்கள் தங்களுடைய கடைசி அடியை எடுத்து வைத்த போது, அவர் கீழே போகும் தம்முடைய பாதையில் இருந்தார். அவர் ஜீவக்கடலின் அருகில் கடந்து சென்ற போது, அங்கேயிருந்த ஒரு பனையிலிருந்து அவர் பறித்தெடுத்தார் (pulled off), ஏறக்குறைய அவர்கள் அக்கினிசூளைக்குள் தங்கள் கடைசி அடியை எடுத்து வைக்கும் அந்நேரத்தில், தேவகுமாரனைப் போன்ற நான்காவது மனிதர் அங்கே உள்ளே இருந்து, விசிறிக் கொண்டிருந்தார் (fanning away), அவர் அந்த விதமாக, விசிறிக் கொண்டிருந்தார். ஏன்? ஏனென்றால் யாரோ ஒருவர் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, எது சரியோ அதற்காக நின்றார். அல்லேலூயா. சரியாக பாதையின் கடைசியில், தேவன் உண்மை உள்ளவராகவே இருப்பார். சந்தேகப்படுவதை நிறுத்திவிடுங்கள், சமர்ப்பித்து விடுங்கள், அதைச் செய்வதை நிறுத்தி விட்டு, தேவனை அனுமதியுங்கள். அவர், "நான் ஒரு வருஷத்தில் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். நான் ஒரு வருடத்திலேயே முழு காரியத்தையும் உங்களுக்குக் கொடுத்தால், காட்டு மிருகங்கள் உள்ளே வந்து உங்களை அழித்துப்போடும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, உங்களுக்கு இயலுகிறபடி, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். ஆமென். 65. கொஞ்சம் கொஞ்சமாக, நீங்கள் இந்த ஒரு கூட்ட எமோரியர்களை கொன்றொழிக்கையில், நான் உங்களை உள்ளே போகப் பண்ணி, கீழ்ப்படுத்தும்படி செய்வேன். நீங்கள் இந்த ஒரு கூட்ட ஏவியர்களைக் கொன்றொழிப்பீர்களானால், நான் உங்களை உள்ளே போகச் செய்து, ஜெயித்து கைப் பற்றும்படி செய்வேன். யாரோ ஒருவர், "நல்லது, நான் பெற்றுவிட்டேன்.... நான் சென்ற இரவு ஜெபித்தேன். முடமான ஒரு கரம் எனக்கு இருந்தது, என்னால் செய்ய முடிந்த ஒரே காரியம் என்னுடைய விரலை அப்படியும் இப்படியும் வேகமாக அசைக்க முடிந்தது தான்" என்று கூறினார். நல்லது, நீங்கள் அவ்வளவு தூரம் தான் நீட்டுகிறீர்கள். சகோதரனே, நல்லது, நீங்கள் அதிக தூரமாக விரிப்பீர்களானால், நீங்கள் உங்கள் கையை அசைப்பீர்கள். நீங்கள் உங்கள் விசுவாசத்தை பரவலாக்குவீர்களானால், நீங்கள் ஜெயிக்கும்படி தேவன் செய்வார். அது உங்களுடையதாக இருக்கிறது. தேவன் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டுமாக உங்களுக்கு வாக்குத் தத்தம் பண்ணியிருக்கிறார். அல்லேலூயா. வியூ. என்னே, நான் நன்றாக உணருகிறேன். ஓ தேவனே, என்னை பெரிய அளவில் பரவச்செய்யும். ஆமென். ஆமென். 66. காலடிகள் என்பது ஜெயமாக இருக்கிறது. அவர் யோசுவாவிடம், "கால் - உன் உள்ளங்கால் மிதிக்கும் எல்லா இடத்தையும் எல்லா இடங்களையும், நான் உனக்குக் கொடுப்பேன்” என்றார். காலடிகள் என்பது ஜெயமாக இருந்தது, சகோதரனே. நான் இன்று உனக்குச் சொல்லுகிறேன், தேவன் நமக்குக் கொடுக்கிற நிலங்களின் மேல் மிதிப்போம். தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமைகள், எல்லாமே. கிறிஸ்துவுக்குள் வருவது என்பது இங்கேயிருக்கும் பெரிய வளைவு மண்டபச்சாலைக்குப் போவது போன்றதாகும், அது பல்வேறுவகையான பொருட்கள் இருக்கும் சரக்கு விற்பனைக் கடைக்குள் (variety store) போவது போன்றதாகும். இந்தக் கூடாரத்தின் அளவுடைய பல்வகை பொருட்கள் உடைய சரக்கு விற்பனைக் கடையில், அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். 67. நான் எல்லாவிடங்களிலும் சுற்றிப் பார்ப்பேன்; இங்கே எல்லாம் உள்ளன. எல்லா அலமாரிகளும் அருமையான அழகான காரியங்களால் நிரம்பியிருக்கின்றன. எனக்கு பிடித்தமான எல்லாமே, அவைகள் எல்லாமே என்னுடையதாக இருக்கின்றன. எனக்கு சொந்தம்... அவைகள் ஒவ்வொன்றுமே எனக்கு சொந்தமாக இருக்கிறது. நான் அங்கு போய் எனக்கு விருப்பமான எதையும் எடுக்க முடியும். கிறிஸ்துவே பல்வேறுவகையான பொருட்கள் இருக்கும் நமது சரக்குவிற்பனைக் கடையாக (variety store) இருக்கிறார். ஒரே ஆவியினாலே, நாமெல்லாரும் ஒரே பெரிய பல்வகை பொருட்கள் இருக்கும் பண்டசாலையில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். ஆமென். உங்களுக்குத் தேவையான எதையும், அவர் கொடுப்பார். எனக்கு சுகம் தேவை என்றால், நான் அதை எடுத்துக் கொள்வேன். எனக்கு சந்தோஷம் தேவை என்றால், நான் அதை எடுத்துக்கொள்வேன். எனக்கு ஜெயம் தேவை என்றால், நான் அதை எடுத்துக்கொள்வேன். அவை எல்லாமே பல்வகை பொருட்கள் இருக்கும் தேவனுடைய பெரிய பண்டசாலையில் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்படும் போது, அந்த பல்வகை பொருட்கள் இருக்கும் பண்டசாலையில் உள்ள எல்லாமே எனக்கும் உங்களுக்கும் சொந்தமாக இருக்கின்றன. சகோதரனே, சுற்றிலும் நகர போதுமான இடத்தைப் பற்றி பேசுகிறீர்களே. நாம் ஜெயம் பெறுவோம். நமக்கு சுகம் தேவையா? அதோ அது உங்களுக்காகவே அங்கே இருக்கிறது; அப்படியே கை நீட்டி அதை எடுத்துக் கொள்வோம். அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக, நீங்கள் இங்கே ஒரு சில காரியங்களை உதைத்து தலைகீழாக கவிழ்த்துப்போட வேண்டி இருக்கும், அதைப் பெற்றுக் கொள்ளும்படி ஒரு சில காரியங்களினூடாக தள்ளிக் கொண்டு கடந்து செல்லுங்கள். ஆனால் முன்னால் சென்று, அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்காக ஏணியை எடுத்து, மேலே சென்றடைய வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் உடையவர்களாக இருந்தால், தேவன் அங்கே ஒரு ஏணியை வைத்திருக்கிறார். ஆமென். ஓ, என்னே . என் விளக்கில் எண்ணெயைத் தாரும், என் விளக்கில் எண்ணெயைத் தாரும், என் விளக்கில் எண்ணெயைத் தாரும், நான் ஜெபிக்கிறேன். என் விளக்கில் எண்ணெயைத் தாரும், விடியற்காலை மட்டுமாக, பாளயத்தில் நான் பிரகாசமாக சுடர்விட்டு எரியட்டும். ஆமென். ஆம், ஐயா. கர்த்தாவே, எண்ணெயால் என்னை நிரப்பும். நான் சுவிசேஷத்தைக் கொண்டு ஒளிரச்செய்யும். நான் வெளிச்சத்தைக் காட்டட்டும். 68. தேவன் செய்வார் என்றும், தேவன் அதை வைத்திருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறவர்களாய், இன்றிரவு இங்கே உள்ளே இருக்கும் ஒவ்வொரு நபரும், தேவன் நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். இப்பொழுது, அவர், "நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் போய் சேரும் மட்டுமாக நான் முழுவதும் சரியாக உங்களைக் கவனித்துக்கொள்வேன்” என்று சொல்லியிருக்கிறார். மகத்தான நித்திய தேவனுடைய மகிமைகளுக்குள் நாம் பிரவேசிக்கும்படி, அதோ அங்கே யோர்தானைக் கடந்து செல்வது மட்டுமாக, நம்முடைய வியாதியைச் சுகமாக்கவும், பரிசுத்த ஆவியை நமக்குக் கொடுக்கவும், சந்தோஷத்தையும், மன சமாதானத்தையும் மற்றும் எல்லாவற்றையும் கொடுப்பதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அல்லேலூயா. நான் உங்களை மிக நீண்ட நேரம் வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். ஓ, மிகவும் பக்திபரவசப்படுகிறேன். நான் -நான் உங்களிடம் கூறுகிறேன், நான் பக்தி பரவசப்படுகிறேன். அல்லேலூயா. எப்படியும் என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைக்கப் போகிறீர்கள், எனவே அதோடு கூட இப்பொழுதோ அதை அழைக்கத் தொடங்கிவிடுங்கள். சரி. எனக்கு எந்த கௌரவமும் கிடையாது. நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் என்னுடைய வழியை எடுத்துக் கொண்ட போதே, அதோ அங்கே பின்னால் கல்வாரியில் அவை எல்லாமே தொலைந்து போய் விட்டது. நான் அவருடைய கிருபையினாலே, இதனூடாகப் போகும்படி தேவனுடைய கிருபையின் மூலமாக நான் தீர்மானித்து விட்டேன். 69. சுகமளித்தலைப் பிரசங்கம் பண்ணுவதும், தேவனுடைய மீட்பின் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் பிரசங்கம் பண்ணுவதும். இன்றிரவு அவர் இங்கேயிருக்கிறார். அவருடைய ஆவி இங்கேயிருக்கிறது. அவருடைய மகிமை இங்கேயிருக்கிறது, அவருடைய வல்லமை இங்கேயிருக்கிறது. அவருடைய மன மகிழ்ச்சி இங்கேயிருக்கிறது. அவருடைய அன்பு இங்கே இருக்கிறது. அவருடைய வல்லமை இங்கேயிருக்கிறது. அவருடைய ஆவி இங்கேயிருக்கிறது. அவருடைய ஊழியக் காரர்கள் இங்கே இருக்கிறார்கள். அவருடைய வார்த்தை இங்கே இருக்கிறது. அவர் தாமே இங்கேயிருக்கிறார். அவர் எதற்காக மரித்தாரோ அவை எல்லாமே உங்களுக்காகவே இங்கே இருக்கிறது. உங்களுக்கு எதுவும் தேவையிருக்கிறதா? அப்படியானால் நாம் சற்றே மேலே அடைந்து, அதைப் பெற்றுக்கொள்வோம். ஆமென். அது என்னுடையதாக இருக்கிறது. நீங்கள் நீங்கள் வாக்குத் தத்தத்தை உரிமைக் கோரும்போது, அந்தச் சிறிய பழைய ஏவியன் அங்கே வெளியே போய்விடுவான். அப்படியே அவனை வழியை விட்டு வெளியே தள்ளி, சமஸ்தானத்தைப் பிடித்து, தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். யாரோ ஒருவர், "இப்பொழுது, நீ ஏதோவொன்றைக் குறித்து சாட்சி கூறிக் கொண்டிருக்கிறாயே, அங்கே அதில் எதுவுமே இல்லை" என்று கூறலாம். அவனை அப்படியே வழியை விட்டு வெளியே தள்ளுங்கள். அந்தக் காரியத்தை சிலுவையில் அறைந்து விட்டு, தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். அதுவே சரி. "நீங்கள் மரித்துவிட்டீர்கள், மேலும் நீங்கள்... கிறிஸ்து தேவனுக்குள் மறைந்திருந்தார், கிறிஸ்து மூலமாக, பரிசுத்த ஆவியினாரே முத்திரையிடப்பட்டிருக்கிறோம். அது சரியே. உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பாதுகாப்பாக நீங்கள் இருக்கிறீர்கள், உலகத்திலே கவலைப்பட ஒரு காரியமும் இல்லை. 70. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஓ, பரிசுத்த ஆவியானவர் வந்து, இந்த ஒரு கூட்ட ஜனங்களை சரியாக இப்பொழுதே பற்றிப் பிடித்துக்கொள்வதைக் காண எவ்வளவாக நான் விரும்பி இருப்பேன். அந்த சில சிறிய பழைய விதைகள்.... நான் வார்த்தையைப் பேசுவதில் மற்றவரை விட மிகவும் தாழ்ந்த மாதிரியாகவே நான் இருக்கிறேன், ஏனென்றால் நான் - என்ன கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் அப்படியே உள் ஊக்கத்தின் மூலமாகவே பிரசங்கம் பண்ண வேண்டியுள்ளது. அது வருவதை நான் காணும்போது, அப்படியே கை நீட்டி, அதைப் பிடித்து, அதை ஜனங்களை நோக்கி எறிகிறேன். எனவே அது.... என்னுடைய - என்னுடைய எல்லா, "his-களும்”, “hain'tகளும்", "carry-களும்", "fetch-களும்", "tote-களும்", என்னால் - என்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை. ஆயினும் நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன் மற்ற சகோதரரர்களில் சிலரைப்போன்று, அதை நன்கு அலங்காரம் நிறைந்ததாகச் செய்ய என்னால் இயலாமல் இருக்கலாம், ஆனால் நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். ஆமென். அது என்னை இரட்சித்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அது என்னைச் சுகப்படுத்தினது. அது மரணப்படுக்கையை விட்டு என்னை வெளியே எடுத்தது. அது இப்பொழுது என்னுடைய இருதயத்தை நிரப்புகிறது. அது எனக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. நான் இயேசு கிறிஸ்துவோடு கூட (அல்லேலூயா) மட்டும் திருப்தியுள்ளவனாயிருக்கிறேன். 71. ஆவியானவர் இங்கேயிருக்கிறார். இரட்சிக்கப்பட விரும்புகிற யார் வேண்டுமானாலும், நீங்கள் சரியாக இப்பொழுதே இரட்சிக்கப்பட முடியும். சுகமடைய விரும்புகிற யார் வேண்டுமானாலும், உங்களால் சரியாக இப்பொழுதே சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சுகப்படுத்தும்படியாக தேவன் இங்கே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, உங்களுக்கு நன்றி. அப்படியானால் சற்றே ஒரு நிமிடம் நான் சொல்லுவதற்கு கவனம் செலுத்துங்கள். இயேசு கிறிஸ்து இங்கேயிருக்கிறார், நீங்கள் சரியாக இப்பொழுதே அதை விசுவாசிப்பீர்காளால், இக்கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துவார். நீங்கள் சரியாக இப்பொழுதே அதை ஏற்றுக்கொண்டு, கர்த்தாவே, நான் அதை இப்பொழுது என்னுடைய தனிப்பட்ட சொத்தாக ஏற்றுக் கொள்கிறேன், நான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன், நான் இங்கே உமது இராஜ்யத்திற்குள் இருக்கிறேன்; நான் உம்முடைய மகத்தான பலவகை பொருட்களும் நிறைந்த பண்டசாலையில் இருக்கிறேன், சுகத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு உரிமை எனக்குண்டு, நான் அப்படியே இங்கே நடந்து, அந்த ஏணியின் மேல் அடி எடுத்து வைத்து, ஏறி, அதை அங்கிருந்து எடுத்துவிட்டே, கீழே இறங்கப் போகிறேன், அப்போது அதைக் குறித்து யாருமே எதையும் என்னிடம் சொல்லப் போவதில்லை, ஏனென்றால் இயேசு கிறிஸ்து தான் என்னை இங்கே கொண்டு வந்து, இவைகள் எல்லாமே என்னுடையது என்று சொல்லியிருக்கிறார் என்று கூறுவீர்களானால். அது சரி. பிசாசு வெளியே ஜன்னலில் நின்று, “ஏய், உன்னால் அதைச் செய்ய முடியாது” என்பான். "உன்னால் முடியாதா? அப்படியானால் என்னைக் கவனி” என்று கூறுங்கள். ஆமென். அது சரியே. "என்னால் முடியாது என்றால், இதைப் பார்." "இப்பொழுது, நீ ஏதோவொன்றை உணருவதற்கு முன்பாகவே நீ சுகமடைந்து விட்டதாக சாட்சி கூறாமல் இருப்பது தான் உனக்கு நல்லது என்று கூறுவான். ஏதோவொன்றை உணருவதா? சகோதரனே, நான் ஏதோவொன்றை விசுவாசிக்கிறேன். தேவன் எதைக் கூறினாரோ அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கி றேன், நீங்களும் அவ்வாறு விசுவாசிக்கவில்லையா? 72. அவருடைய ஆவியானது சரியாக இங்கே கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தினர் மேல் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வெளிப்படையாகவே, அது இருக்கிறது என்பதை நான் அறிவேன். இப்பொழுது பாருங்கள், என்னால் இங்கே ஒரு ஜெப வரிசையை அழைக்க முடிந்து, என்னால் அதை தாங்கி நிற்க முடியுமானால், நான் வேறு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரங்களோ எடுத்து, ஒவ்வொரு நபரையும் ஒருவர் பின் ஒருவராக இங்கே கொண்டு வந்திருப்பேன். உங்களுடைய ஜீவியம், பாவங்களோ அல்லது அது என்னவாக இருந்தாலும், அதை மறைக்கவே முடியாது. உங்களுக்கு அது தெரியும். ஆனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பீர்களானால், சரியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே தேவன் உங்களைச் சுகப்படுத்துவார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? கவனியுங்கள். ஒவ்வொருவரும், இந்த விதமாகப் பாருங்கள். நான் உங்கள் விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்ற அந்த வார்த்தையை நீங்கள் எடுத்து, அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் அதைச் செய்வீர்களா? 73. நீங்கள் அதைச் செய்து, அவ்வாறு செய்வதில் பயபக்தி யாகவும் உத்தமமாகவும் இருப்பீர்களானால், சர்வவல்லமை உள்ள தேவன் உங்களைச் சுகப்படுத்துவார். எங்கிலும் உள்ளவர்களே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென் இப்பொழுது, அவருக்கு முன்பாக அமைதியாக இருந்து, கவனியுங்கள். நாம் அவரை நேசிப்போம். வார்த்தையானது புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இப்பொழுது, தேவனுடைய ஆவி இக்கூட்டத்தில் இருக்கிறது. அது கூட்டத்தில் இருந்து வருகிறது. இப்பொழுது, பிரசங்கம் (முடிந்த) பிறகு, அவர் இங்கு வந்து, நான் சத்தியத்தையே கூறியிருந்தால், அவர் சத்தியத்தை சரி என நிரூபிப்பார். 74. இப்பொழுது, நாம் இங்கே மேலே மேடையில், இருவரை அழைப்போமானால், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் கண்டு இருந்தால், ஒருக்கால் கர்த்தர் பேசப் போவதாக இருந்து, ஜனங்களிடம் கூறியிருப்பார். நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் யாரையாவது இங்கே மேலே கொண்டிருக்க வேண்டுமென்று நான் நம்பவில்லை. நீங்கள் இப்பொழுது இருக்கிற இடத்திலேயே சரியாக அங்கே வெளியிலேயே இருந்து, நீங்கள் விசுவாசித்தாலும், நீங்கள் இருக்கும் இடத்திலேயே தேவன் சரியாக அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஜெபம் பண்ணுங்கள். தேவனிடம் வேண்டுதல் செய்து, உத்தமமாயிருங்கள். தேவன் அதைச் செய்யாமல் போகிறாரா என்று பாருங்கள். தேவன்- தேவன் அதைச் செய்ய கடமைப்பட்டவராயிருக்கிறார். இப்பொழுது, நீங்கள் ஜெபம் பண்ணுங்கள். இப்பொழுது நாம் தேவனோடு கூட நம்மை அடைத்துக் கொள்வோம். எல்லா வெளிப்புற உலகமும் போகட்டும். 75. நான், "கர்த்தாவே, நான் உமது வார்த்தையை விசுவாசிக்கிறேன். அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். நான் அதை இப்பொழுது என்னுடைய தனிப்பட்ட சொத்தாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுவீர்களானால். எத்தனை பேர் சரியாக இப்பொழுதே உங்கள் இருதயத்தில் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்? அப்படியானால், "கர்த்தாவே, நான் அதைச் செய்து கொண்டு இருக்கிறேன். நான் என்னுடைய தனிப்பட்ட சொத்தாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறுங்கள். நீங்கள் ஜெபத்தில் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களால் கூடுமானால், இந்தவிதமாக நோக்கிப் பார்த்து, அப்படியே ஜெபித்துக் கொண்டிருந்து, "ஆண்டவரே, உமது ஆசீர்வாதங்களின் ஒரு தொடுதலை எனக்குத் தாரும். ஓ நித்திய தேவனே, உமது ஊழியனாக இருக்க எனக்கு உதவி செய்யும்” என்று கூறிக் கொண்டிருங்கள். அப்படியே பரிசுத்த ஆவியானவர் அசைவாட விடுங்கள்… தேவனே, இரக்கமாயிரும். அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தினரை சுற்றிலும் நோக்கிப் பார்த்தருளும். எல்லாருமே முழு அமைதியோடு இருக்கிறார்கள். கர்த்தர் இங்கே இருக்கிறார் என்பதை நான் அறிவேன். உமது கழுத்துப்பட்டையை தளர்த்திக் கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற, ஐயா, நீர் அதை விசுவாசிக்கிறீரா? நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? உமது கரம்... ஆமாம். நிச்சயமாக, உமது காதில், ஒரு காது கேட்க உதவும் கருவியை (trumpet) (ear trumpet - என்பது பழங்காலத்தில் காது கேட்க உதவும் கருவியாக இருந்தது - மொழிபெயர்ப்பாளர்) வைத்திருக்கிறதைக் காண்கிறேன், நீர் அதை வைத்திருக்க-வில்லையா? உமக்கு செவிட்டு காது உள்ளது. என்னால் அதைக் காண முடிகிறது. ஆமாம், உ-ஊ, உமது காது செவிடாக இருக்கிறது. 76. அதுவும் அல்லாமல், உமக்கு வேறொரு கோளாறும் கூட இருக்கிறது, இல்லையா? உமக்கு புற்றுநோய் உள்ளது, வயிற்றில் புற்றுநோய் இருக்கிறது, அது சரிதானா? உம்முடைய வயிற்றில் புற்றுநோய் உள்ளது.... நீங்கள் சரியாக இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமாம், எனக்குத் தெரியும். நான் அவரைப் பிடிக்கவே... அவருடைய கவனத்தைக் (கவரவே) முயற்சித்துக் கொண்டிருந்தேன். என்னால் அவரை சரியாகப் பிடிக்க முடியுமானால், அந்த காது கேளாமை அவரைவிட்டுப் போய்விடும். நீர் பார்க்க வேண்டுமென்று நான் விரும்பினேன், அவர் இங்கே மேடைக்கு வருவதற்கு முன்பாகவே, அது செய்யப்பட முடியும். பாருங்கள்? இப்பொழுது, அது அவருடைய தனிப்பட்ட விசுவாசமாக இருக்கிறது. அது என்னுடைய விசுவாசம் அல்ல; அது அவருடைய விசுவாசமாக இருக்கிறது. இப்பொழுது, என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அந்த மனிதர் மரிக்கப் போகிறார். சரியாக அவருடைய வயிற்றின் குழியில் அவருக்கு ஒரு புற்று நோய் உள்ளது. அவருக்கு காது கேட்க உதவும் கருவிகள் (trumpet) உள்ளன, அவைகள் அவருடைய காதில் இருப்பதை உங்களால் காண முடியும். இப்பொழுது, அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் வாலிபனே, அவரை உனக்குத் தெரியுமா? அவரிடம் பேசி, இயேசு கிறிஸ்துவை அவருடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் கூறு, அப்படியானால் உன்னால் அந்த காது கேட்க உதவும் கருவிகளை அவருடைய காதுகளை விட்டு எடுத்துவிட முடியும். அவர் எழுந்து நின்று சாட்சி கூறுவார். இப்பொழுது, நீ அவரிடம் பேசிக் கொண்டிரு. அவரிடம், "இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறு. அப்பொழுது அவரால் சுகமடைய முடியும். ஆமென். வேறு யாரோ ஒருவர் விசுவாசிக்கிறார்கள். 77. திருவாளரே, நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? உமக்கு பக்கத்தில் இருப்பது உம்முடைய மனைவி, இல்லையா? உ-ஊ. ஆம், நீ இதற்கு முன்னர் சுகம் அடைந்திருக்கிறாய். ஒரு மார்பகத்தில் அல்லது ஏதோவொன்றில் உனக்கு ஏதோ தவறு நேர்ந்திருந்தது. அது சரிதானா? இப்பொழுது உனக்கு தொண்டையில் ஒரு கோளாறு இருக்கிறது. அது சரிதானா? நீயும் உன் கணவனாரும் இருவரும் உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் போட்டு ஜெபம் பண்ணுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார். சற்று முன்பு உன்னுடைய முகத்தை துடைத்த, அங்கேயிருக்கும் கருப்பின சீமாட்டியே, நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? அந்தச் சிறு சீமாட்டி - கொண்டு விசிறிக் கொண்டிருக்கிறாள். நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ அவ்வாறு விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்றும், அவர் உன்னைக் குணமாக்குவார் என்றும் விசுவாசி. பெண்களுக்குரிய கோளாறு. ஆனால், நீ அதை விசுவாசித்தால், இயேசு கிறிஸ்துவால் உன்னைச் சுகப்படுத்த முடியும். நீ - நீ அவரிடம் விண்ணப்பம் பண்ணி, அவரிடத்தில் விசுவாசம் உடையவளாக இருந்தால், அவர் அதைச் செய்வார். நீ அதை விசுவாசிக்கிறாயா? சரி. தேவன் உன்னை ஆசீர்வதிப் பாராக. நீ ஜெபிக்கத் துவங்கும்படி நான் விரும்புகிறேன். ஏதோவொரு இடத்திலிருக்கும் உங்களில் மற்றவர்களில் சிலர் விசுவாசிக்கிறீர்கள். 78. அங்கே முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் நீ விசுவாசிக்கிறாயா? அங்கே உனக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருப்பது உன்னுடைய கணவர் தானா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று, அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? நான் - நான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதாக நானாகவே என்னை விளம்பரப் படுத்திக் கொள்கிறேன் என்று யாரோ ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், அவ்வாறு இன்று வெளியே என்னிடம் புகார் கூறப்பட்டது. ஒருக்கால் நான் உம்மை புண்படுத்த விரும்பவில்லை, நான் அவருடைய ஊழியக்காரன் என்று தான் சொல்லுவேன். நண்பர்களே, ஒரு தீர்க்கதரிசி என்பது ஒரு பிரசங்கியாக இருக்கிறான். சீமாட்டியே, இந்த விதமாகப் பாருங்கள், உங்களுக்கு மனத் துயரமோ அல்லது ஏதோவொன்றோ இருப்பது போன்று தோன்றுகிறது. ஆமாம், அது உங்கள் கணவர். அவருக்கு கீல்வாதம் உள்ளது. யாரோ ஒருவர் நகர்ந்து போவதை நான் காண்கிறேன். ஆம். இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உம்மைச் சுகப்படுத்துவார் என்று அவரை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா? சீமாட்டியே, பெருங்குடல் அல்லது வேறு ஏதோவொன்றில், சற்றுமுன்பு உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கவில்லையா? பெருங்குடலில் உள்ள ஏதோவொன்று, அது இருந்தது தானே, இல்லையா? உ-ஊ, ஏதோவொன்று வெளியே எடுக்கப்பட்டது, பெருங்குடலிலிருந்து ஒரு புற்றுநோய் அல்லது ஏதோவொன்று எடுக்கப்பட்டது. 79. உங்களுக்கு ஏதோவொரு கோளாறு இருந்தது, இல்லையா? இங்கே வரும்படி முயற்சிக்கவோ, அல்லது வேறு ஏதோ ஒன்றிற்காகவோ உங்களுக்கு நிறைய யுத்தம் உண்டாயிருந்தது. நீங்கள் சாலையில் தொல்லைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், இல்லையா? அவரை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிற சீமாட்டியே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உ-ஊ. அது சரியே. நீங்கள் தொலைத்திருந்த அந்த பாக்கெட் புத்தகத்தை நீங்கள் எப்பொழுதாவது கண்டு பிடித்தீர்களா? நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? சரி. நீங்கள் ஏதோவொரு நாளில் அதைக் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை, இல்லையா? நீங்கள் இப்பொழுது காண்கிறீர்கள், உண்மை உள்ளவர்களாக இருங்கள். 80. இப்பொழுது, சீமாட்டியே, அங்கே வெளியே நீ விசுவாசிக்கிறாயா? இங்கே வேறொரு சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நீ குறித்த ஏதோவொன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாய். வியாதியாயிருக்கும் ஒரு அன்பார்ந்தவர்கள் உனக்கு இருக்கிறார்கள், அது ஒரு அம்மா அது சரியே. நீ விசுவாசிக்கிறாயா? விசுவாசம் உடையவளாயிரு. அப்பொழுது தேவன் அவர்களைச் சுகப்படுத்துவார். நீ அப்படியே உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசி. உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசி. அங்கேயிருக்கும் சீமாட்டியே, நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அவள் ஒரு யூதப்பெண், அவள் அவ்வாறு இல்லையா? அவள் யூதப் பெண்மணி இல்லையா? அவளுக்கு எலும்பில் புற்றுநோய் இருக்கிறது. அது சரி அல்லவா? நீ அவளுடைய - இப்பொழுது அவளுக்காக சுகத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறாயா? அவள் சுகத்தைப் பெற்றுக்கொள்வாள் என்று நீ விசுவாசிக்கிறாயா? சரி, நீ உன்னுடைய தலையைத் தாழ்த்தி ஜெபிக்க நான் விரும்புகிறேன். ஜனங்களாகிய உங்களோடுள்ள காரியம் என்ன? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் இருக்கிறார் என்று நீங்கள் காணவில்லையா? சுகமளிக்கும்படியாக அவருடைய வல்லமை யானது இங்கேயிருக்கிறது. இங்கே உள்ளே யாரோ ஒருவர் விசுவாசிக்கிறார்கள். தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். 81. உன்னுடைய கையில் புத்தகத்தை வைத்தபடி, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற, சீமாட்டியே. நீ வியாதியாய் இருக்கிறாய் உனக்கு சுகம் தேவைப்படுகிறது. உனக்கு நீரிழிவு நோய் உள்ளது. அது சரிதானா? நீ வெறுமனே அதை விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துவார். ஆமென். அப்படியே ஜெபித்துக் கொண்டிருங்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். இங்கேயிருக்கும் சகோதரியே, நீ சொல்லுவதை என்னால் - என்னால் கேட்க முடியவில்லை. அது இந்நேரத்தில், குறிப்பாக என்னுடைய காதுகளாக இருக்கிறது. உனக்குப் புரிகிறதா? நீ பேசிக் கொண்டிருப்பது எனக்குத் தெரிகிறது, ஆனால் நான்… அங்கே இருக்கும் சிறு பிரசங்கியாரே, நீர் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பீரானால், அந்த குடலிலுள்ள கோளாறு உம்மை விட்டுப் போய்விடும். அந்த ஒவ்வாமைகள் சீக்கிரத்தில் போய்விடும், நீர் அதனால் இனி மேலும் கஷ்டப்படமாட்டீர். தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிரும். உம்மால் அதைச் செய்ய முடியுமா? ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டிக்கு இருதயக்கோளாறு இருக்கிறது. அவள் தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியபடி, சரியாக அந்த மனிதருக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் சுகமடைய விரும்புகிறாள். இவளும் கூட சுகமடைய முடியும். சீமாட்டியே, நீ விசுவாசிக்கிறாயா, தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? சரி. உன்னுடைய காலூன்றி எழுந்து நில். 82. இங்கேயுள்ள எத்தனை பேர்... விரும்புகிறீர்கள். கட்டிடத்தில் எல்லாவிடங்களிலுமுள்ள எத்தனை பேர் சுகமடைய விரும்புகிறீர்கள்? அப்படியானால் நீங்கள் என்ன செய்வது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் என்று நான் கூற மாட்டேன். இப்பொழுது, பாருங்கள். சுகமடைய விரும்புகிற எல்லாரும், உங்கள் கரத்தை உயர உயர்த்துங்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார் என்பதை நீங்கள் காணும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது பாருங்கள், உங்கள் கரங்களை மேலே உயர்த்தியிருக்கிற எல்லாரும். இப்பொழுது, தங்கள் கரங்களை மேலே உயர்த்தியிருக்கிற வேறு யாராவது இருக்கிறார்களா என்று பாருங்கள், உங்கள் கரங்களை அந்த நபரின் மேல் வையுங்கள்... நல்லது, நீங்கள் ஒருவர் மற்றவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள யாரோ ஒருவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். ஓ தேவனே, ஓ, இரக்கம். இங்கே ஒருவர் மற்றவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். அங்கே எல்லா இடங்களிலும் இருக்கிறவர்கள். யாரோ ஒருவர்... அப்படியே உங்கள்... ஐ வையுங்கள். தங்கள் கரத்தை மேலே உயர்த்தியுள்ள எல்லாரும், யாரோ ஒருவர் அவர்கள் மேல் கரங்களை வையுங்கள். வேதாகமம், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறியுள்ளது. பிரசங்கியா? இல்லை. விசுவாசிக்கிறவர்களை அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கரங்களை வைப்பார்களானால், அவர்கள் குணமடைவார்கள்.” அது சரிதானா? 83. இப்பொழுது, உங்கள் சொந்த எளிய வழியில், நாம் கீழே ஒன்று கூடி ஜெபிக்கத் தொடங்குவோம். நீங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கையில், உங்களை கட்டி வைத்திருக்கிற பிசாசை சபிக்கும்படி, நான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வேண்டிக்கொள்ளப் போகிறேன். அவர் அதைச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஊழியக்காரர்களே, இங்கே வாருங்கள், இங்கே வந்து, என்னோடு கூட இங்கே நில்லுங்கள். இங்கேயுள்ள இந்தக் காட்சியை எல்லாரும் பாருங்கள். இப்பொழுது இங்கே என்ன இருக்கிறது என்று பாருங்கள். இப்பொழுது எல்லாவிடங்களிலும் பயபக்தியாயிருங்கள், மிகவும் பயபக்தியாயிருங்கள். ஏனென்றால் பிசாசுகள் ஒரு சில நிமிடங்களில் இங்கே கட்டவிழ்த்து விடப்படும், அது ஒரு ஆபத்தான காரியமாக இருக்கிறது. ஓ தேவனே, இந்த ஜனங்கள் மேல் இரக்கமாயிரும். கர்த்தாவே, நீர் அவர்களைப் பாரும், அவர்கள் ஆழமான உத்தமத்தோடு இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் கரங்களை ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கிறார்கள். நீர் இப்பொழுது இங்கேயிருக்கிறீர் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். கர்த்தாவே, இன்றிரவு நான் உம்முடைய வார்த்தையை மேற்கோள் காட்டிக் கொண்டு இருக்கிறேன். நீர், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்று சொல்லியிருக்கிறீர். 84. கர்த்தாவே, கடந்து சென்ற இந்த வாரம் முழுவதும் உமது ஆவி கிரியை செய்வதை அவர்கள் கண்டார்கள், இருதயங்களின் இரகசியங்கள் கூறப்பட்டதை அவர்கள் காண்கிறார்கள், பிசாசின் வல்லமையைக் காண்கிறார்கள் குருடரைக் காணச் செய்வதையும், செவிடர்கள் கேட்பதையும், கீல்வாதத்தினால் கட்டப்பட்டவர்களாய் படுத்திருக்கிற முடவர்களும், கட்டில்களிலும் தூக்கு படுக்கைகளிலும் படுத்திருக்கிறவர்கள் எழுந்து நடந்து செல்வதையும் காண்கிறார்கள். ஓ தேவனே, இன்றிரவு மட்டுமாக, நோயாளிகளில் ஒருவர் கூட இக்கட்டிடத்தில் இல்லை. கர்த்தாவே, உம்முடைய வல்லமைக் காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு நாங்கள் உம்முடைய ஜீவனுள்ள சபையாக இருக்கையில், பிசாசுக்கு சவால் விடுகிறோம். நாங்கள் எந்த ஏவியரையும், அல்லது கானானியரையும், அல்லது மற்ற எவரையும் எங்களுடைய வழியில் நிற்க விடமாட்டோம். இன்றிரவு, நாங்கள் விசுவாசத்தில் முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறோம், எங்களை வழி நடத்தும்படியாக, தேவனுடைய தூதனானவர் இங்கேயிருக்கிறார். இப்பொழுது, சாத்தானே, கொடூரமானவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெய்வ பக்தியற்ற ஆவி ஜனங்களை விட்டு வெளியே வருவதாக. ஆமென். விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். இப்பொழுது தொடர்ந்து தேவனோடு கூட அடைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து விசுவாசித்தவண்ணம் இருங்கள். தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். அவர் சரியாக உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் சரியாக இப்பொழுதே உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசிக்கிற உங்களில் முதலாவது நபர், உங்கள் காலூன்றி எழுந்து நின்று, "தேவனுக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுங்கள். முதலாவது... அதோ ஒருவர். அதோ வேறொருவர், வேறொருவர், வேறொருவர். அது சரியே. அது சரியே. எழுந்து நின்று தேவனைத் துதியுங்கள். அல்லேலூயா. அங்கேதான் காரியம். தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக, துதிக்கப்படுவாராக...?